கப்பலேந்தி மாதா ஆலய வருடத் திருப்பலி
கப்பலேந்தி மாதா ஆலய வருடத் திருப்பலி

கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய வருடத் திருப்பலி இன்று (01) ஞாயிற்றுக்கிழமை 6.00 அருட்தந்தை அல்ரீன் அடிகளார் தலைமையில் ஆரம்பமானது.

முழுமையாக கத்தோலிக்க கிராமமாகத் திகழும் கட்டைக்காட்டு மக்கள் நூற்றுக்கணக்கானோர் இத் திருப்பலியில் பங்கெடுத்தனர்.

இக் கிராம மக்களின் பங்குக் கோயிலானது சிறப்புமிக்க கோவிலாகத் திகழ்வது அனைவருக்கும் தெரிந்ததாகும். வருடந்தோறும் நடைபெறும் இவ்வருடாந்தத் திருப்பலியானது 2022 ஆம் ஆண்டின் நன்றி கூறும் திருப்பலியாகவும், பிறந்திருக்கும் புத்தாண்டை வரவேற்கும் திருப்பலியாகவும் நடைபெற்றதை அக் கிராம மக்கள் மன நிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் வழிபட்டுச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது ..

அருட்தந்தை இத் திருப்பலி நிறைவுபெற்றதும் கடல் ஆசிர்வாத நிகழ்ச்சியும் நடைபெற்றது இப்பலியின் சிறப்பம்சமானதொன்றாகக் குறிப்பிடத்தக்கது.

துயர் பகிர்வோம்

கப்பலேந்தி மாதா ஆலய வருடத் திருப்பலி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)