கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

துயர் பகிர்வோம்

Best Online Tutoring

'நூற்றாண்டுக்கான முன்னெடுப்பு' எனும் தொனிப் பொருளின் கீழ் 2023 ஆண்டு புதிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தில் கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். மகேந்திரகுமார் தலைமையில் 02.01.2023 நடைபெற்றது. இந் நிகழ்வில் தேசியக் கொடியினை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏற்றி வைக்க அலுவலகக் கொடியினை பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி த. இராசசேகர் ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக்கும் புதுவருட ஆரம்பத்தை அரச சேவை உறுதியுரையுடன் அலுவலகத்தின் சகல ஊழியர்களாலும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இன்றைய பணி ஆரம்பிக்கும் நிகழ்வையொட்டி அலுவலகத்தில் பழ மரக்கன்றுகள் நடப்பட்டது.

கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)