உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் பறக்கவிடப்பட்ட பட்டங்கள்

இந்தியாவைப் பிரதிபலித்து வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன.

யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் மற்றும் 74ஆவது குடியரசு தினம் ஆகியவற்றை முன்னிட்டு ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் என்ற கருப்பொருளின் கீழ், இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்தியக் கொடியின் நிறங்களை கொண்ட அழகான பட்டங்கள் திறந்த வெளியில் பறக்கவிடப்பட்டன.

இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் உள்ளிட்ட இந்திய துணைத்தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் பறக்கவிடப்பட்ட பட்டங்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)