
posted 4th January 2023
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனின் இல்லத்துக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரிடம் நலம் விசாரித்தார்.
இந்த விஜயத்தின் போது, வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்த் தேசியப் பிரச்சினைகளை முன்வைத்த இரா.சம்பந்தன், வடக்கு, கிழக்குப் பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு காண வேண்டும் என்றார்.
வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி இணக்கமான தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ, சம்பந்தனுக்கு உறுதியளித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)