இரத்ததான முகாம்

நிந்தவூர் ஜாமிஉத்தௌஹீத் ஜும்ஆ பள்ளிவாசல் சமூக சேவைகள் பிரிவு இரத்ததான முகாம் ஒன்றை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

ஜாமிஉத் தௌஹீத் சமூக சேவைப் பிரிவு 13 ஆவது தடவையாக நடத்திய இந்த முகாம் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.

ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கயாளர் சபைத் தலைமையில் மௌலவி இத்ரீஸ் (ஸஹ்வி) தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பெருந்தொகையான ஆண்களும், பெண்களும் இரத்த தானம் வழங்கினர்.

இந்த முகாமில் பெறப்பட்ட இரத்தம் கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 200 பேர் வரையான ஆண்களும், பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் முகாமிற்கு வருகை தந்து இரத்ததானம் செய்ததாகவும் தலைவர் மௌலவி இத்ரீஸ் (ஸஹ்வி) தெரிவித்தார்.

இரத்ததான முகாம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)