இரத்ததான முகாம்  28 ஆம் திகதி
இரத்ததான முகாம்  28 ஆம் திகதி

நிந்தவூர் ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆப்பள்ளிவாசலின், சமூக சேவைகள் பிரிவு நடத்தும் இரத்ததான முகாம் எதிர்வரும் 28 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவிருக்கின்றது.

ஜாமிஉத்தௌஹீத் சமூக சேவைகள் பிரிவு 13 ஆவது தடவையாக இந்த இரத்ததான முகாமை நடத்தவுள்ளது.

நிந்தவூர் ஜாமிஉத்தௌஹீத் பள்ளிவாசலில் 28 ஆம் திகதி சனிக்கிழமை காலை எட்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை இந்த இரத்ததான முகாம் நடைபெறுமெனவும், பெண்களுக்கெனப்பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்ததான முகாம்  28 ஆம் திகதி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)