அறிமுகமான குத்துவிளக்குக் கட்சி ஆரம்பம்

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பல சபைகளில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து களமிறங்கியுள்ளது.

குத்து விளக்கு சின்னத்தில் போட்டியிடும் மேற்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நாவிதன் வெளி சம்மாந்துறை காரைதீவு நிந்தவூர் ஆலையடிவேம்பு திருக்கோவில் பொத்துவில் ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாகவும், நீதிமன்ற நடவடிக்கையால் தடைப்பட்டுள்ள கல்முறை மாநகர சபைக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் போது அதற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளதாகவும் ரெலோ அமைப்பின் உப தலைவரும், கட்சியின் பிரதேச தேர்தல் ஒருங்கிணைப்பாளருமான ஹென்ரி மகேந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பாளர் அறிமுக நிழ்வுடன் கூடிய முதலாவது பிரச்சார நடவடிக்கைகளை 27ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளதகாவும் ஒருங்கிணைப்பாளர் ஹென்ரி மகேந்திரன் தெரிவித்தார்.

27ஆம் திகதி ஆலையடிவேம்பு, திருகோவில் பிரதேச சபைகளுக்கான வேட்பாளர் அறிமுகமும் பிரச்சாரக் கூட்டமும் ஆரம்பிக்கப்பட்டதுடன், 28ஆம் திகதி பொத்துவில் (கோமாரியில்) மற்றும் சம்மாந்துறை, நிந்தவூரை உள்ளடக்கியதாக காரைதீவிலும் வேட்பாளர் அறிமுக, பிரச்சார கூட்டங்கள் இடம் பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் முக்கிய சில சபைகளில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு, குத்துவிளக்கு சின்னத்துடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே கிடைக்குமெனவும் ஹென்ரி மகேந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அறிமுகமான குத்துவிளக்குக் கட்சி ஆரம்பம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)