வெற்றிபெற்றது றோயல் எவ்சி அணி

மன்னார் விடத்தில்தீவு பகுதியில் இடம்பெற்ற VIFA PREMIER LEAGUE - 2022 உதைபந்தாட்ட போட்டியில் றோயல் எவ்சி அணியினர் 3 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் ஹெரிற்ரேச் எவ்சி அணியினரை வெற்றிக் கொண்டுள்ளது.

விடத்தல்தீவு உதைப்பந்தாட்ட பயிற்சி கூட (VIFE) இயக்குனர் வைத்தியகலாநிதி மதுர நாயகம் அவர்களின் தலைமையில் அவரது நிதி பங்களிப்புடன் முகாமையாளர் திரு நதன்ராஜ் அவர்களின் நெறிப்படுத்தலில் விடத்தல்தீவில் நடாத்தப்பட்ட VIFA PREMIER LEAGUE - 2022 உதைபந்தாட்ட போட்டிகள் இடம்பெற்றன.

இப் போட்டிகளில் இப் பகுதியிலுள்ள 12 கழகங்கள் கலந்து கொண்டன இதற்கான இறுதி போட்டியானது கடந்த 16.01.2022 அன்று றோயல் எவ்சி அணியினருக்கும் ஹெரிற்ரேச் எவ்சி அணியினருக்கும் இடையே இறுதி போட்டியாக இடம்பெற்றது.

இவ் இறுதி போட்டியில் றோயல் எவ்சி அணியானது 3 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் ஹெரிற்ரேச் எவ்சி அணியினரை வெற்றிக் கொண்டுள்ளது.

இறுதிப்போட்டியில் பிரதம விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன உதவித் தலைவரும் மன்னார் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருமான திரு. டுல்ஷான் நாகஹவத்த அவர்களும் சிறப்பு விருந்தினராக இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன உதவித் தலைவரும், வடமாகாண உதைபந்தாட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான திரு. இம்மானுவேல் ஆர்னோல்ட் அவர்களும், அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. லக்ஸ்மன் அவர்களும் விடத்தல்தீவு புதிய அபிவிருத்தி அமைப்பின் தலைவர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லாஸ் அவர்களும், விடத்தல்தீவு புனித ஜோசப்வாஸ் பாடசாலை அதிபர் திரு. கியோமர் பயஸ் அவர்களும் விருந்தினர்களாக பங்கேற்றி இருந்தனர்.

வெற்றிபெற்றது றோயல் எவ்சி அணி

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House