விவசாய தொழிற்நுற்ப கற்கைநெறி மன்னாரில் ஆரம்பிக்க நடவடிக்கை - கமநல சேவை பணிப்பாளர்

மன்னார் மாவட்டத்தில் இரு பிரதேச செயலகப் பிரிவுகளில் விவசாய தொழிற்நுற்ப கற்கை நெறியை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை விவசாய அமைச்சின் எண்ணக்கருவுக்கு அமைய எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் கமநல சேவை பணிப்பாளர் திருமதி சாகிரா பானு, மன்னார் மாவட்ட செயலக ஜெயிக்கா மண்டபத்தில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தலைமையில்வெள்ளிக்கிழமை நடைபெற்ற மன்னார் மாவட்டத்தின் விவசாய ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் (28.01.2022) தெரிவித்தார்.

விவசாய திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், இராணுவ அதிகாரிகள் ஆகியோர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் பணிப்பாளர் இங்கு உரைநிகழ்த்துகையில், காலபோகம் நெற்செய்கையின் பாதிப்பும், இயற்கை உரத்தினால் வந்த தாக்கமும் பற்றி விபரிக்கையில், இவ்வெற்றியின்மையைக் கருத்தில் கொண்ட அரசாங்கம், அதில் தொடர்புடைய இணைப்புச் செயல்பாட்டின் ஒரு பகுதியை இராணுவத்திடம் அரசாங்கம் கையளித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இராணுவத்தினரையும் ஓர் இணைப்பாளராக இணைத்து சேதன பசளையை சிறுபோகத்திற்கு பெறக்கூடிய அதிக வாய்ப்புகளையும் பெறுவதற்குரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வீட்டுத் தோட்டத்தை ஊக்குவிக்கு முகமாக சமூர்த்தியினால் மாணவர்களுக்கு கொடுத்தது போன்று இனிவரும் காலங்களிலும் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன,

அத்துடன், எமது அமைச்சினால் ஐம்பது விவசாயிகளைக் கொண்ட ஒரு கிராமத்தை தெரிவு செய்து ஒரு தொழிற்நுற்ப கற்கை நெறியை ஏற்படுத்தி அக் கிராமத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இவ் அபிவிரித்தி நடவடிக்கைகளுக்கு இரண்டு பிரதேச செயலகப் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இதில் அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரி உங்களுக்கு தெளிவாக விளக்கம் அளிப்பார் என தெரிவித்தார்.

விவசாய தொழிற்நுற்ப கற்கைநெறி மன்னாரில் ஆரம்பிக்க நடவடிக்கை - கமநல சேவை பணிப்பாளர்

வாஸ் கூஞ்ஞ

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House