
posted 8th January 2022
வவுனியாவில் அத்தியவசியப் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
புதிய ஜனநாயக மாக்கசிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக சனிக்கிழமை (08) காலை இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்;
கோட்டாபய அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில் உழைக்கும் மக்கள் நடு வீதிக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், அவர்களது வயிற்றில் அடிக்கும் அவலநிலையை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் நாட்டில் பட்டினிச்சாவு ஏற்படும் அபாயநிலை தோன்றுவதை எவராலும் தடுக்க முடியாது.
நாட்டை கொள்ளையடித்தவன், நாட்டுப் பணத்தை திருடியவன் எல்லாம் அதிகாரத்தில் இருந்து சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். ஆனால் சாதரண மக்கள் இவர்களுக்கு வாக்களித்த குற்றத்தை தவிர வேறொன்றுமே செய்யவில்லை.
கடந்த தேர்தல் காலங்களில் கோட்டாபயவும், மஹிந்தவும் கொடுத்த வாக்குறுதிகளால் மக்களின் பசியை தீர்க்க முடிந்ததா? எனவே இராணுவமயமாகி வரும் இந்த கொடுங்கோல் ஆட்சியை அழித்தொழிக்க நாட்டு மக்கள் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளிக்காட்ட முன்வர வேண்டும் என்றனர்.
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்,
உழைக்கும் மக்களை பட்டினிபோடாதே
கட்டுப்பாட்டுவிலையை கொண்டுவா
ஊழல் பணத்தை வெளியேகொண்டுவா
உழைப்போரை வதைக்காதே
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு
போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயக மாக்கசிச லெனினிச கட்சியின் செயலாளர் சி.கா. செந்தில்வேல், கட்சியின் முக்கியஸ்தர்களான செல்வம் கதிர்காமநாதன், நி. பிரதீபன், தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ந. கருணாநிதி, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளையின் பா. நேசராஜா, சமூகநீதிக்கான வெகுஜன அமைப்பினர் உட்பட பொது அமைப்புக்கள் ஆதரவை வழங்கியதுடன், பெருமளவான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.


எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House