விடுவிக்கப்பட்ட கட்டுவன் - மயிலிட்டி வீதி
விடுவிக்கப்பட்ட கட்டுவன் - மயிலிட்டி வீதி

நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள யாழ் சர்வதேச விமான நிலையம் செல்லும் பாதையான கட்டுவன் - மயிலிட்டி வீதியின் 400மீட்டர் தூரத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட இறுதிப் பகுதியில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை சபைக் கூட்டத்தில்;

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் குறித்த வீதியில் விடுவிக்கப்படாது உள்ள 400மீற்றர் வீதியை இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிடம் முன்வைத்திருந்தார். அதற்கு ஜனாதிபதி உடனடியாக குறித்த விடயம் தொடர்பாக ஆராயுமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு பணிப்பு விடுத்திருந்தார்.
பணிப்பு விடுக்கப்பட்டு தற்போது இரண்டு மாத காலம் ஆன நிலையில் உயர்பாதுகாப்பு வலயமாக உள்ள 400மீட்டர் பகுதியின் முட்கம்பி வேலிகள் இராணுவத்தினரால் பின்நகர்த்தப்பட்டு 400மீட்டர் பகுதியை கட்டுவன் - மயிலிட்டி வீதியுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் கருத்து தெரிவிக்கையில்;

நல்லாட்சி காலத்தில் கட்டுவன் - மயிலிட்டி வீதியில் உள்ள 400மீட்டர் பகுதியை விடுவிக்க பலரும் முயற்சி எடுத்து அது பயனளிக்காத நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராக நானும், முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் குறித்த வீதி விடுவிப்பு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சிற்கு கடிதம் அனுப்பி இருந்தோம். அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஜனாதிபதி அவர்களிடமும் குறித்த 400மீற்றர் தூரத்தை விடுவிக்க வேண்டியதன் அவசியம் தொடர்பாக வலியுறுத்தி இருந்தேன்.nஅதன் பலனாக தற்போது வீதியின் கிழக்குப் பக்கமாக உள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலய முட்கம்பி வேலிகள் பின்நகர்த்தப்படுகின்றன.
தேசிய பாதுகாப்பு நிலைமைகளை ஆராய்ந்து ஆறு மீட்டர் தூரம் பாதுகாப்பு வேலிகளை நகர்த்தி 400மீட்டர் நீளமான பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபையினரிடம் கையளிக்கப்படும்.

எனவே குறித்த விடயத்தில் கரிசனை காட்டிய அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோருக்கும் மக்கள் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

விடுவிக்கப்பட்ட கட்டுவன் - மயிலிட்டி வீதி
விடுவிக்கப்பட்ட கட்டுவன் - மயிலிட்டி வீதி

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House