
posted 23rd January 2022
டெங்கு அபாயத்தை அடுத்து வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார பிரிவினரினால் டெங்கு பரவும் இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், டெங்கு பரவும் அபாயம் காணப்பட்ட இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.
வவுனியாவில் கடந்த இரு மாதங்களில் 20 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு கட்டமாக வவுனியா, இறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவு பொதுச்சுகாதார பரிசோதகர் தலைமையில் நகரின் சகாயாமாதாபுரம், சூசைப்பிள்ளையார்குளம் ஆகிய பகுதிகளில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் விதமாக விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அப்பகுதியிலுள்ள வீடுகள், வர்த்தக நிலையங்களின் திண்மக்கழிவுகள் நகரசபை வாகனத்தில் ஏற்றப்பட்டதுடன் நுளம்பு குடம்பிகள் பெருகும் நிலையில் காணப்பட்ட இடங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்களும் வழங்கப்பட்டன.
இந் நடவடிக்கையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுகாதார ஊழியர்கள், நகரசபை சுகாதார ஊழியர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House