
posted 12th January 2022

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நயீம்
ஏற்கனவே இடைக்காலத்தில் நடைபெற்ற மன்னார் பிரதேச சபைக்கான தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களாகிய நாங்கள் தொடர்ந்து இனம் மதம் வேறுபாடு அற்ற சபையாக அமைய ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எம்.ஐ.எம். இஸதீன் அவர்களை தவிசாளராக கொண்டு வந்தோம். அதைத்தான் தற்பொழுதும் முன்னெடுத்துள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செய்யது முகம்மது நயீம் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த மாதம் (12.2021) தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து புதிய தவிசாளர் தெரிவு புதன்கிழமை (12.01.2022) இடம்பெற்ற பின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் செய்யது முகம்மது நயீம் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாங்கள் இன்று புதன்கிழமை (12.01.20220 மன்னார் பிரதேச சபைக்கான புதிய தவிசாளர் தெரிவின்போது மன்னார் பிரதேச சபை தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எம்.ஐ.எம். இஸதீன் அவர்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.
ஏற்கனவே இடைக்காலத்தில் நடைபெற்ற இவ் மன்னார் பிரதேச சபைக்கான தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள்தான் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எம்.ஐ.எம். இஸதீன் அவர்களை தவிசாளராக கொண்டு வந்தது.
நாட்டின் சட்டத்தையும் சுற்றறிக்கையையும் மதித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த எமது முன்னாள் தவிசாளர் பதவி விலகியதையடுத்தே எம்.ஐ.எம். இஸ்ஸதீன் எமது கட்சியினால் தவிசாளராக கொண்டு வந்தோம்.
நாங்கள் இவ் சபைக்கு வந்ததின் நோக்கம் இனம் மதம் வேறுபாடின்றி மக்களுக்கு சேவை செய்வதுதான் எமது நோக்கமாகவும் செயல்பாடாகவும் இருந்தது இருக்கின்றது.
இதை முன்னிருத்தியே நாங்கள் மீண்டும் எம்.ஐ.எம். இஸ்ஸதீன் அவர்களை ஏகமனதாக புதிய தவிசாளராக கொண்டு வந்ததில் மகிழ்ச்சி அடைகின்றோம் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House