முடக்க நிலை மீண்டும் வராதிருக்க பூஸ்ரர் ஊசியைப் போடுங்கள் - யாழ். அரசாங்க அதிபர்

“அனைத்து செயல்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசியை பெறாதவிடத்து, மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கி செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும்”, என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் அவர் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

மேலும், யாழ் மாவட்ட சுகாதார மேம்பாட்டு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கொரோனா, டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவலை தடுப்பது பற்றியும் ஆராயப்பட்டது.

யாழ். மாவட்டத்தில் இதுவரை 19 ஆயிரத்து 62 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகினர். தொற்று பரவலால் 502 இறப்புக்களும் பதிவு செய்யப்பட்டன. தற்போது 35 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

தடுப்பூசியை பொறுத்தவரை 30 வயதுக்கு மேல் 3 இலட்சத்து 9 ஆயிரத்து 839 பேரும், 29 தொடக்கம் 20 வயதுடையவர்களில் 56 ஆயிரம் பேரும், 12 தொடக்கம் 19 வயதுடையவர்களில் 57 அயிரத்து 265 பேரும் முதலாவது டோஸை பெற்றுள்ளனர்.

பூஸ்டர் தடுப்பூசியை 88 ஆயிரத்து 800 பேர் பெற்றுள்ளனர். முதலாம், இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், பூஸ்டர் தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். 30 வீதமானவர்களே பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெற்றுள்ளனர்.

ஒமைக்ரோன் திரிபு தற்போது பரவிவரும் நிலையில் யாழ். மாவட்டத்திலும் அது பரவுவதற்கான ஏதுநிலைகள் காணப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது அவசியம். இதற்கமைய, எதிர்வரும் 31 ஆம் திகதி முதல், பூஸ்டர் தடுப்பூசி வாரம் பிரகடனப்படுத்தவுள்ளோம்.

பாடசாலை போக்குவரத்து உட்பட அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என்றார்.

முடக்க நிலை மீண்டும் வராதிருக்க பூஸ்ரர் ஊசியைப் போடுங்கள் - யாழ். அரசாங்க அதிபர்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House