மருத்துவ பராமரிப்பு சேவைகளை வீட்டிலும்

யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகப் பகுதிக்குள் வீட்டில் மருத்துவ பராமரிப்பு சேவைகளை வழங்குவது தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

யாழ். மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தால் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் வீட்டில் இருந்து வைத்தியசாலைக்கு அழைத்து வர முடியாத நிலையில் உள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மோசமடைந்து செல்லும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கையில் உள்ள நோயாளர்களுக்கு வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பு சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

இந்தத் திட்டமானது பருத்தித்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகள் மூலம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்த விசேட பராமரிப்பு தேவையானவர்கள் கீழ்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை - 021 226 3262

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை - 021 205 9227

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை - 021 227 1150

ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை - 021 221 1660

ஆகிய மருத்துவமனைகளில் தமக்கு அருகில் உள்ள அந்தந்த வைத்தியாசலைகளில் ஒன்றின் தொலைபேசி இலக்கங்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 4.00 வரை அழைப்பதன் மூலம் தமக்கு வழங்கப்பட வேண்டிய பராமரிப்பை முன்பதிவு செய்ய வேண்டும்.

இதன் பின், அந்த வைத்தியசாலையில் இருந்து மருத்துவ பராமரிப்பு குழுவினர் நோயாளியின் வீட்டிற்கு வருகை தந்து, அவர்களின் நோய் நிலைமையை ஆராய்ந்து வீட்டில் வழங்கக்கூடிய மருத்துவ பராமரிப்பை வழங்குவார்கள்.

இந்த சேவை மூலம் அவசர மருத்துவ சேவைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது.

இந்த சேவை மூலம் அவசர தேவைகள் அற்ற பராமரிப்பு மட்டுமே வழங்கப்படும். (உதாரணமாக - உணவு வழங்கும் குழாய், சிறுநீர் குழாய் மாற்றுதல், மருந்து கட்டுதல், வீட்டில் வழங்கக்கூடிய இயன் மருத்துவ சேவைகள் போன்றவை).

இவ்வாறு அந்த நோயாளிகளுக்கு அவசர மருத்துவ தேவைகள் ஏற்படின் 1990 அவசர அம்புலன்ஸ் சேவையை அழைப்பதன் மூலம் வைத்தியசாலைக்கு செல்ல முடியும் - என்றும் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவ பராமரிப்பு சேவைகளை வீட்டிலும்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House