
posted 31st January 2022
மன்னார் மாவட்டத்தில் மின்காற்றாடிகள் நிறுவப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் எற்கனவே நடுக்குடா மற்றும் பேசாலையில் நிறுவப்பட்டிருக்கும் 36 மின்காற்றாடிகளால் ஏற்பட்டிருக்கும் பாதக விளைவுகள் மற்றும் தரமற்ற அபிவிருத்தி வேலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் மன்னார் நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் திங்கள் கிழமை (31.01.2022) காலை 10 மணிக்கு மன்னார் நகரில் அமைந்துள்ள மறைந்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவு சிலை பகுதியிலிருந்து புறப்பட்ட இவ் போராட்டம் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக தரித்து நின்று அமைதியான முறையில் சில மணிநேரம் தங்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அந்தவேளையில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், மன்னார் மூர்வீதி பெரிய பள்ளிவாசல் மௌலவி அசீம், அருட்பணியாளர்கள் அலெக்கசாண்டர் சில்வா (பெனோ) அடிகளார் எஸ்.nஐயபாலன் குரூஸ் அடிகளார், பிரiஐகள் குழு தலைவர் அருட்பணி ஏ.ஞாணபிரகாசம் அடிகளார். மன்னார் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் முஜாஹீர் மன்னார் நகரசபை தவிசாளர், சட்டத்தரனி எம்.எம்.சபூர்தீன், முசலி பிரதேச சபை உறுப்பினர் முஜீபுர் றஹ்மான், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் திருச்செல்வம் மற்றும் மன்னார் மாவட்ட சுற்றாடலுக்கான பாதுகாப்பு மைய அதிகாரி யனக்கவிதானகே ஆகியோர் இவ் கண்டன பேரனியில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதைத் தொடர்ந்து இது தொடர்பான மகஜர் ஒன்றை மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி ஏ.ஞாணப்பிரகாசம் அடிகளார் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல்லிடம் கையளித்தார்.
இவ் கவனயீர்ப்பு போராட்டத்தில் அரசியல்வாதிகள் மற்றும் மன்னார் தீவிலுள்ள பல கிராமத்து மக்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House