
posted 21st January 2022
வியாழக்கிழமை (20.01.2022) மன்னாரில் 6 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இதனால் மன்னாரில் இந்த மாதம் (ஜனவரி. 2022) கொரோனா தொற்றாளர்கள் 37 ஆக உயர்ந்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் வியாழக்கிழமை (20.01.2022) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட 6 கொரோனா தொற்றாளர்களில் மன்னார் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் எருக்கலம்பிட்டி வைத்தியசாலையிலும் தலா 3 கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இவ் ஜனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட 1773 அன்டிஜென் பரிசோதனையில் 37 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரைக்கும் மன்னார் மாவட்டத்தில் 3220 கொரோனா தொற்றாளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் இப் பகுதியில் போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளில் முதலாவது தடுப்பூசி 81,330 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 79,773 பேருக்கும் பூஸ்டர் தடுப்பூசி 20,991 பேருக்கும் மாணவர்களுக்கு 8,088 பேருக்கும் போடப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ரி.வினோதன் அவர்களின் கொரோனா தொடர்பான நாளாந்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெள்ளிக்கிழமை (21.02.2022) 1017 பாடசாலைச் சிறுவர் சிறுமியர்கள் தமது பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொண்டதாகவும், இவர்களில் அதிகபட்சமாக முசலி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 430 மாணவர்கள் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தனது பதிவில் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House