மன்னாரில் கனியவள மணல் அகழ்வு நிறுத்தும் அமைச்சரின் வாக்கு பொய்யானது - சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.

கனியவள மணல் அகழும் திட்டத்துக்கு எதிராக நான் பாரரளுமன்றத்தில் குரல் எழுப்பியபோது, மக்கள் விரும்பாவிடில்தான், நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார், இதை சார்ந்த அமைச்சர். ஆனால் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் மின்காற்றாடிகள் நிறுவப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மற்றும் எற்கனவே நடுக்குடா மற்றும் பேசாலையில் நிறுவப்பட்டிருக்கும் 36 மின்காற்றாடிகளால் ஏற்பட்டிருக்கும் பாதக விளைவுகள், மற்றும் தரமற்ற அபிவிருத்தி வேலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்குடன் மன்னார் நகரில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் திங்கள் கிழமை (31.01.2022) காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்ட வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இங்க தொடர்ந்து உரையாற்றுகையில்;

அவுஸ்ரேலியா நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனம், மன்னார் தீவில் குறிப்பாக மன்னார் கடற்கரையோரமான பிரதேசங்களில் கனியவள மணல் அகழ்வு தொடர்பான விடயங்களில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் விளம்பரப்படுத்தி வந்தார்கள்.

பின் தொடர்ச்சியான எமது எதிர்ப்பின் காரணமாக இவர்கள் தங்கள் திட்டத்தை கடந்த 2020 ஆம் ஆண்டு கைவிட்டிருந்தனர்.

ஆனால் தற்பொழுது இவர்கள் இலங்கையில் பதிவு செய்யப்பட்டிருந்த நிறுவனங்களுக்கு ஊடாக இவற்றின் ஆராய்ச்சியில் இரவு வேளைகளில் மன்னார் பகுதியிலுள்ள கடற்கரை பிரதேசங்களில் இங்குள்ள மணல்களை பரீட்சித்து பார்ப்பதில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் இதன் மணல் தற்பொழுது இரவு வேளைகளில் ஏற்றுமதி செய்யப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக நான் பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தபோது அப்பொழுது இதற்கான அமைச்சர் எனக்கு பதிலளிக்கையில், மக்கள் இதை விரும்பாவிட்டால் நாங்கள் இதை செய்ய மாட்டோம் என தெரிவித்திருந்தார்.

உண்மையில் இந்த மணல் அகழ்வானது மன்னார் தீவில் மக்கள் வாழ முடியாத அளவுக்கு இட்டுச் செல்லும் ஒரு செயல்பாடாக அமைந்து வருகின்றது.

ஆகவே, அரசானது இத் திட்டத்தை உடன் கைவிட வேண்டும் என நான் இந்த நேரத்தில் மக்கள் சார்பாக வேண்டி நிற்கின்றேன்.

இவ்வாறு இங்கு அமைக்கப்பட்டுள்ள மின்காற்றாடிகள் மன்னார் தீவில் நடுக்குடாவிலிருந்து ஐந்து தென்னம்பிள்ளை வரை உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பொழுது ஐந்து தென்னம்பிள்ளை தொடக்கம் தாழ்வுபாடு சாந்திபுரம் ஊடாக காற்றாலை மின் உற்பத்தியை பெறுவதற்கு அரசு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இது இப்பொழுது முன்னெடுப்புகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தநேரம் நான் பாராளுமன்றத்தில் எனது எதிர்ப்பை தெரிவித்தபோதும், அந்த நேரம் மக்களுக்கு சரியான விபரம் தெரியாத காரணத்தினால் மக்கள் அதனை எதிர்க்க முடியாத நிலையில் இருந்தனர்.

ஆனால் தற்பெழுது இதன் பாதிப்புக்களை மக்கள் தற்பொழுது உணரத் தொடங்கியுள்ளனர். மக்கள் வாழும் பிரதேசத்தில் மக்களுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய இந்த மின்காற்றாடிகளை அமைக்கும் திட்டத்தை அரசு உடன் நிறுத்த வேண்டும் என இவ்வாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னாரில் கனியவள மணல் அகழ்வு நிறுத்தும் அமைச்சரின் வாக்கு பொய்யானது - சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி.

தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B