
posted 13th February 2022
மன்னாரில் மேற்கொள்ளப்பட இருக்கும் இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத்தை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கையாக மன்னார் மக்களுக்கு விழப்புணர்வை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கையாக மன்னாருக்கு குழு ஒன்று விஜயம் மேற்கொண்டது.
சூரியசக்தி காற்றாலை மற்றும் நீர்மின் உற்பத்திகளினூடாக இலங்கையில் 70 வீதமான மின் உற்பத்தியை பெற வேண்டும் என்பது அரசாங்கத்தின் திட்டமாக இருப்பதனால், இதற்கான முன்னெடுப்புகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இதற்கமைய மன்னாரில் மேற்கொள்ளப்பட இருக்கும் இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத்தை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கையாக மன்னார் மக்களுக்கு விழப்புணர்வை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் முதல் கட்டமாக இது தொடர்பாக கொழும்பிலிருந்து ஒரு உயர்மட்ட குழு மன்னாருக்கு வருகை தந்து முக்கிய அமைப்பினரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதையிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தலைமையில் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபை கொண்ட குழு மன்னாருக்கு சனிக்கிழமை (12.02.2022) வருகை தந்திருந்ததது.
இக் குழுவில் நிலைபெறுதகு வலு அதிகாரசபை தலைவர் றஞ்சித் சீபால, நிலைபெறுதகு வலு அதிகாரசபை தேசிய ஆய்வு உதவி திட்ட பணிப்பாளர் மொமட் அவ்ஷல் மற்றும் மன்னாரின் இரண்டாம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி விரிவாக்கத்தின் இணைப்பாளர் திருமதி தமார டில்ஹானி உள்ளிட்ட ஒரு குழுவினர் வருகை தந்திருந்தனர்.
இக் குழுவானது சனிக்கிழமை (12.02.2022) காலை 11 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழு ஆளுநர் சபையினரை சந்தித்து கருத்து மறிமாற்றங்கள் இடம்பெற்றன.
இதன்போது மன்னார் பிரதேச செயலாளர் எம். பிரதீப் மற்றும் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி ஏ. ஞாணப்பிரகாசம் அடிகளார் தலைமைத்துவம் கொண்ட பிரஜைகள் குழு ஆளுநர் சபையினரும் இவ் அமர்வில் கலந்து கொண்டுனர்.
இதைத் தொடர்ந்து இதே தினம் இரண்டாவது கூட்டம் மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்ட மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் மன்னார் கடற்தொழில் நீரியல்வள திணைக்கள கேட்போர் கூடத்திலும், பின் ஞாயிற்றுக் கிழமை (13.02.2022) காலை 9.30 மணியளவில் மன்னார் நகரின் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பனம் பொருள் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இச் சந்திப்புக்கள் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House