மஜ்மா நகரில் ஜனாஸா நல்லடடக்கம்

சாய்ந்தமருது பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது ஜனாஸா மட்டக்களப்பு, ஓட்டமாவடியில் அமைந்துள்ள மஜ்மா நகர் கொவிட் மையவாடியில் நேற்று (30) நல்லடடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை குறித்த பெண்ணின் புதல்வரான அலியார் சௌபர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சாய்ந்தமருது-15 ஆம் பிரிவு புதுப்பள்ளி வீதியிலுள்ள ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றில், தனிமையில் வசித்து வந்த 78 வயதுடைய சுலைமான் செய்யது முஹாரி என்பவர் கடந்த வியாழக்கிழமை (27) அதிகாலை கொலை செய்யப்பட்டு, அவர் வசமிருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டிருந்தன.

இதையடுத்து, அன்றைய தினம் மாலை கல்முனை நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று உத்தரவிட்டதன் பேரில் குறித்த பெண்ணின் சடலம் பிரதேச பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது. அங்கு அவரது உடலில் இருந்து பெறப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரி மட்டக்களப்பு கொவிட் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.

அந்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை சனிக்கிழமை (29) மாலை அம்பாறை வைத்தியசாலைக்கு கிடைக்கப் பெற்றதாகவும் அதில் தனது தாய்க்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தங்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் புதல்வர் அலியார் சௌபர் தெரிவித்தார்.

இதையடுத்தே தமது தாயின் ஜனாஸா நேற்று மஜ்மா நகரில் நல்லடடக்கம் செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை கொலையாளி இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், இச்சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள், குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சாய்ந்தமருது பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ நேரத்திலும் அதற்கு முன்னிரவிலும் குறித்த பெண்ணின் வீடு அமைந்துள்ள வீதியில் காணப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற சி.சி.ரி.வி. வீடியோ காட்சிகளைக் கொண்டு பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கொலையாளி என சந்தேகிக்கப்படும் அந்த மர்ம நபரை அடையாளம் காண்பதற்காக அவ்வீடியோ காட்சிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்பிலுள்ள பகுப்பாய்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மஜ்மா நகரில் ஜனாஸா நல்லடடக்கம்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House