போஷாக்கு மேம்படுத்தல் திட்டம் - சஜீத் பிரேமதாச

எமது நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருப்பது இந்த டிஜிட்றல் புரட்சியின் பின்னடைவே காரணம் எனவும் கூறலாம். வடக்கு மாகாணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஓர் இடம். இங்குள்ள அபிவிருத்திகள் மிகவும் குறைந்தளவே காணப்படுகின்றது. குழந்தைகள் அத்துடன் பெண்களுக்கான போஷாக்கு தன்மை மிக குறைவாகவே காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சத்தி கட்சியானது இதற்கான வேலைத்திட்டங்களை கொண்டுள்ளது என எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சத்தி கட்சியின் தலைவருமான சஜீத் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

சனிக்கிழமை (08.01.2022) மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 500 மாணவர்களுக்கு ஜக்கிய மக்கள் சத்தி கட்சியின் பிரபஞ்சம் ஊடாக கனணி இயந்திரங்களை வழங்கிய வைபவம் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜங்க அமைச்சருமான புத்திக பத்திரன முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் உனைஷ் பாருக் வன்னி ஜக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் உமாசந்திரா பிரகாஷ் மற்றும் வவுனியா மாவட்ட ஐக்கிய மக்கள் சத்தி கட்சியின் அமைப்பாளர் திருமதி றசீக்கா உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சத்தி கட்சியின் தலைவருமான சஜீத் பிரேமதாச இந்த விழாவுக்கு வருகை தந்துள்ள முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான புத்திக பத்திரன உனைஷ் பாருக் வவுனியாக மாவட்ட ஐக்கிய மக்கள் சத்தி கட்சியின் அமைப்பாளர் திருமதி றசீக்கா உட்பட யாவருக்கும் இன்று நான் இந்த பாடசாலையில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். மன்னார் எருக்கலம்பிட்டி மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 500 மாணவர்களுக்கு ஜக்கிய மக்கள் சத்தி கட்சியின் பிரபஞ்சம் ஊடாக நாங்கள் இன்று (08.01.2022) கனணி இயந்திரங்களை வழங்கி இருக்கின்றோம்.

அதாவது ஐந்து கனணிகள் ஒரு பிரின்டர் மற்றும் ஸ்மார்ட் போட் போன்றவைகளை வளங்கியிருக்கின்றோம்.

கிராம மட்டத்தில் வாழக்கூடிய மாணவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்தக்கூடிய வகையில் நிவர்த்தி செய்வது ஒரு நோக்கமாக உள்ளது. அதில் ஒரு கட்டமாக இதை நாங்கள் வழங்கியிருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

இப் பாடசாலையில் காணப்படும் கட்டிடத்துக்கு றிசாட் பதியூதின் தனது நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். அத்துடன் இப் பாடசாலை அதிபர் எம்முன் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இப் பாடசாலைக்கு தேவையான வகுப்பறை மற்றும் தேவைகளை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சத்தி கட்சி விரைவில் ஆட்சி அமைக்கும். அவ்வாறு ஆட்சி அமைக்கும்பட்சத்தில் நிச்சயம் இந்த பாடசாலைக்கு கட்டிடம் அமைப்பது மாத்திரமல்ல ஏனைய அபிவிருத்தி தொடர்பான விடயங்களிலும் கவனம் செலுத்தப்படும்.

மன்னார் கல்வி வலயத்தில் 82 பாடசாலைகளும், மடு வலயத்தில் 54 பாடசாலைகளும் மொத்தமாக 136 பாடசாலைகள் இருக்கின்றன. இங்குள்ள அனைத்து பாடசாலைகளிலும் நான் கரிசனை எடுத்து சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். இதன் பொறுப்பை நான் எடுப்பேன்.

வெளிநாடுகளில் டிஜிற்றல் முறையான செயல்பாடுகள் பேசப்படுகின்றன. அங்குள்ள மக்கள் இதனூடாக பொருளாதார ரீதியாக அபிவிருத்தி அடைந்து வருகின்றனர்.

சர்வதேச ரீதியாக உள்ள நாடுகள் கொவிட் 19 சூழ்நிலையில் கூட பொருளாதார ரீதியில் அபிவிருத்தி அடைவதற்கு டிஜிட்றல் முறை அதாவது டிஜிட்றல் புரட்சி என்றும் கூறலாம், மிகவும் முக்கியமாக காணப்பட்டது.

எமது நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருப்பது இந்த டிஜிட்றல் புரட்சியின் பின்னடைவே காரணம் எனவும் கூறலாம்.

பல நாடுகள் தங்கள் அபிவிருத்தியை குறிப்பாக பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக டிஜிட்றல் கற்றல் முறைமையை மிகவும் நேர்த்தியாக முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக தகவல் தொழில் நுட்பம் அந்நாடுகளில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சிமாட் கல்வி முறை வெளிநாடுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.

ஆனால் இந்த கல்வி முறை இலங்கையில் ஒரு புதியதாக பார்க்கப்படுகின்றது. ஆனால் நாம் இதன் தடையை பின்னுக்கு தள்ளிவிட்டு சர்வதேச ரீதியாக காணப்படுகின்ற பல விடயங்களை நாம் கற்க வேண்டும்.

இந்த தொழில் நுட்ப கல்விக்கு ஜக்கிய மக்கள் சக்தி முக்கியத்துவம் கொடுக்க இருக்கின்றது.

அரசாங்கத்திடம் இதற்கான எந்தத் திட்டமும் இல்லை என்று நான் இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஆனால் ஜக்கிய மக்கள் சக்தி கட்சியிடம் இதற்கான வேலைத் திட்டம் உள்ளது.

இது விடயத்தில் நாங்கள் எதிர்கட்சியிலிருந்து இவ் வேலை திட்டத்தை முன்னெடுப்ப்தில் நாம் தயாராக இருக்கின்றோம்.

இந்த பிரபஞ்சம் வேலை திட்டமானது மொனராகலை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமத்தின் பாடசாலையிலே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த இரு நாட்களாக திருகோணமலையில் நான்கு பாடசாலைகளுக்கு டிஜிட்றல் முறையான கனணிகள் வழங்கியுள்ளோம்.

இவ்வாறு வவுனியா பாடசாலைக்கும், 08.01.2022 அன்று மன்னார் பாடசாலையான உங்களுக்கும் வழங்கி இருக்கின்றோம்.

இதைத் தொடர்ந்து 12 ந் திகதி எனது பிறந்த தினம். நாம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வடக்கு பாடசாலைகளுக்கு நாம் இவ்வாறான உதவிகளை முன்னெடுக்கின்றோம்.

செட்டிக்குளம் வைத்திசாலைக்கு 24 இலட்சம் பெறுமதியான சிறுநீரக நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய இயந்திரம் ஒன்றையும் வழங்கியுள்ளோம். இவ்வாறு வவுனியா வைத்திசாலைக்கும் நாம் வழங்கியுள்ளோம்.

இவ்வாறு யாழ் பகுதியிலுள்ள வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, பருத்தித்துறை, தெல்லிப்பளை போன்ற வைத்தியசாலைகளுக்கும் இவ்வாறான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் எமது ஜக்கிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றது.

இன்னொன்றையும் உங்களுக்கு இந்த இடத்தில் ஞாபகமூட்டுகின்றேன். இந்த நாடு கொவிட் 19 தொற்றால் மூடப்பட்டிருந்த வேளையில், மன்னார் மாவட்ட வைத்திசாலைக்கு 24 இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவத்துக்கான இயந்திரத்தை எதிர்கட்சி அலுவலகத்தில் வைத்து இவ் வைத்தியசாலை பணிப்பாளரிடம் கையளித்துள்ளோம்.

ஆகவே மக்களுக்கான ஆரோக்கியம், மாணவர்களுக்கான கல்வி ஆகிய என்னைப் பொறுத்தமட்டில் இவ்விரு விடயங்களும் மிக முக்கியமான விடயங்களாகக் காணப்படுகின்றது. இவற்றை வடக்கு மாகாணத்திலே காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக கிராமப்புறங்களிலே இத் தன்மை கூடுதலாக இருக்கின்றது. ஆனால் இந்த அரசாங்கத்திடம் இதற்கான மாற்று வேலைத்திட்டம் இல்லை. ஆனால் அது நம்மிடம் இருக்கின்றது.

ஜக்கிய மக்கள் சக்தியாலே இனம், மதம் வேறுபாடின்றி இவ்வாறன மக்கள் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க இருக்கின்றோம்.

எமது மக்களோ கொவிட் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பாதிப்படைந்த நிலையில் இருக்கின்றனர்.

இந்த அரசு புதிதாக அறிமுகப்படுத்திய ஒரேயொரு விடயம் வரிசை முறை திட்டமாகும். அதாவது ஒவ்வொரு பொருட்களுக்கும் வரிசை முறையையே இந்த அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அரசு எரிபொருள் தட்டுப்பாட்டை மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டுள்ளார்கள். எரிபொருள் இல்லையேல் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்து, மிகவும் துர்பாக்கிய நிலைக்கு மக்களைத் தள்ளிச் செல்லுவதை யாராலும் தடுக்கவே முடியாது.

இது தொடர்பாக அரசு அக்கறையின்றி இருந்து வருகின்றது. இந்த அரசு தேர்தல் காலத்தில் இன வாதத்தை, மத வாதத்தை தூண்டி மக்களை பிளவுப்படுத்தி தேர்தலில் வெற்றியீட்டுவார்கள்.

ஆனால் மக்கள் சார்ந்த விடயத்தில் இந்த அரசு கவனம் செலுத்துவதில்லை. இது எமது நாட்டிலுள்ள சாபம். எமது தாய் நாட்டை அழிப்பதற்கோ, அல்லது எமது நாட்டை தவறான பாதைகளுக்கு இட்டுச் செல்வதற்கோ நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

இந்த நாடு எம் எல்லோருக்கும் உரிமையான நாடு. இனம், மதம், குலம், சாதி ரீதியாக இந்த நாட்டை பிளவுப்படுத்தாது, அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையோடு ஒருமித்து, நாம் எமது நாட்டை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி செயல்படும் என தெரிவித்தார், எதிர்கட்சி தலைவர் சஜீத் பிரேமதாச.

போஷாக்கு மேம்படுத்தல் திட்டம் - சஜீத் பிரேமதாச

வாஸ் கூஞ்ஞ

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House