
posted 16th January 2022
ஒமைக்ரோன் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் இராணுவத்தினர் தடுப்பூசி ஏற்றும் விசேட செயல்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இதன் ஓர் அங்கமாக யாழ்ப்பாணம் கோட்டை பகுதியிலும் படையினர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை இன்று ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பித்தனர்.
யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் பணிப்புரையின் கீழ் நாட்டில் ஒமைக்ரோன் தொற்று அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் ஏற்றப்படும் நடவடிக்கை ஆரம்பமானது.
ஏற்கனவே ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் தடுப்பூசியை பெற தயக்கம் காட்டி வருகின்றனர். இந்தநிலையிலேயே இராணுவத்தினர் விசேட செயல்திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, நாளை திங்கட்கிழமை இராணுவத்தின் விசேட தடுப்பூசி வழங்கும் முகாம் யாழ்ப்பாணம் கொட்டடி நமசிவாயம் வித்தியாலயத்தில் காலை தொடக்கம் மாலை வரை இடம்பெறவுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House