
posted 2nd January 2022
புத்தாண்டு தினத்தில் வடக்கின் மாவட்டங்களில் இடம்பெற்ற பல அசம்பாவித சம்பவங்களில் ஐவர் பலியாகினர்.
முல்லைத்தீவு - கேப்பாபிலவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.
பிலக்குடியிருப்பை கிருஷ்ணசாமி மாரிமுத்து (வயது 48), சூரியகுமார் கரிதாஸ் (வயது 17) ஆகியோர் உயிரிழந்தனர். சண்முகம் நிறோஜன் (வயது 23) என்ற இளைஞர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, காரைநகர் கசூரினா கடலில் நீராடிய கோண்டாவிலை சேர்ந்த யாழ். இந்துக் கல்லூரி மாணவனான 17 வயதுடைய யோகராசா யோகீசன் என்ற மாணவன உயிரிழந்தார்.
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார். கார்த்தி (வயது 28) என்பவரே கொல்லப்பட்டவராவார்.
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ஊடக நிறுவனம் ஒன்றின் ஹப் ரக வாகனம் ஓட்டோவை மோதியதில் ஓட்டோ சாரதியான ரஜீவன் (வயது 35) என்பவர் உயிரிழந்தார்.
டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் நேற்று சனிிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
ஒரு மோட்டார் சைக்களில் மூன்று இளைஞர்கள் பயணித்தபோதே இந்த விபத்து சம்பவித்துள்ளது.
படுகாயமடைந்த இளைஞர் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தையடுத்து அந்தப் பகுதி மக்கள் நேற்றுக்கூடிய பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House