
posted 13th January 2022
உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.
தனியார் விடுதியில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின்போது சம்மேளனத்தின் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.
யாழ்.மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 17 உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்கிய வகையில் நடத்தப்பட்ட இந்த புதிய நிர்வாக தெரிவில், சம்மேளனத்தின் புதிய தலைவியாக வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்த் தெரிவு செய்யப்பட்டார். சம்மேளனத்தின் புதிய செயலாளராக வலிமேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் ஜெயகாந்தன் துவாரகாவும் பொருளாளராக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் தயாளராஜன் பௌலீனா சுபோஜினியும் தெரிவு செய்யப்பட்டள்ளனர்.
அத்துடன் குறித்த சம்மேளனத்தின் உபதலைவராக நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினர் கௌசலா சிவாவும் உப செயலாளராக யாழ். மாநகரசபை உறுப்பினர் சந்திரகுமார் அனுசியாவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதேவேளை, யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 17 உள்ளூராட்சி மன்றங்களையும் உள்ளடக்கிய வகையில் தலா ஒவ்வொரு நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House