பிரதி ஆணையாளராக கடமையேற்பு
பிரதி ஆணையாளராக கடமையேற்பு

கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எஸ்.எம்.அஸீம், தனது கடமைகளை திங்கட்கிழமை (03) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், ஆணையாளர் எம்.சி. அன்சார், கணக்காளர் ஏ.எச். தஸ்தீக், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி, ஆயுர்வேத வைத்திய அதிகாரி நந்தினி பவான், வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம். ஆரிப், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம். அமீர், சுகாதாரப் பிரிவு முகாமைத்துவ உத்தியோகத்தர் யூ.எம். இஸ்ஹாக் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

2019ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்ட ஏ.எஸ்.எம். அஸீம், 2020 மார்ச் மாதம் தொடக்கம் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையில், மாகாண சபையின் பிரதம செயலாளரினால் இப்புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மருதமுனை ஷம்ஸ் தேசிய கல்லூரியின் பழைய மாணவரான இவர், அஹமட் சிராஜுதீன் மற்றும் ஜஹ்புல் அறபியா தம்பதியரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதி ஆணையாளராக கடமையேற்பு

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House