
posted 10th January 2022


பாவேந்தல் பாலமுனை பாறுக்
தமிழ் இலக்கிய உலகில் பிரபலமாக அறியப்பட்ட கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுனை கலாபூஷணம், பாவேந்தல் பாலமுனை பாறுக்கின் இலக்கியப் பொன்விழா எதிர்வரும் 15 ஆம் திகதி பெருவிழாவாக நடைபெறவிருக்கின்றது.
பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் ஐம்பது வருட இலக்கியப்பணியினைப் பாராட்டி, கிழக்குப் பிராந்தியமேகூடி எடுக்கும், இலக்கியப் பொன்விழா இதுவாகும்.
ஈழத்து இலக்கியப் பரப்பின் மூத்த ஆளுமையான கலாபூணம், பாவேந்தல் பாறூக்கின் மேற்படி இலக்கிய பொன்விழா எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை பாலமுனை பிரதான வீதி, பொறியிலாளர் மர்ஹூம் எம்.சீ.அமீர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில் நுட்பபீட, பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில், முன்னிலை நட்சத்திரங்களாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற மன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தேசிய காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமனற் உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்து கொள்வர்.
அத்துடன் கௌரவ நட்சத்திரங்களாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவண முத்து நவநீதன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா, முன்னாள் கிழக்கு முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் அகியோரும், விசேட நட்சத்திரங்களாக கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர், கலாநிதி செ. யோகராசா, தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, எழுத்தாளர் எம்.அப்துல் றஸாக் (பிரதி அதிபர்) ஆகியோர் விழாவில் கலந்து கொள்ளவிருப்பதுடன்.
பல எழுத்தாளர்கள், முக்கியஸ்தர்கள் சிறப்பு நட்சத்திரங்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும், இலங்கை மற்றும் கடல் கடந்த தேச இலக்கிய நண்பர்கள், மற்றும் இலக்கிய ஆர்வலர்களின் பொன்விழா நாயகனுக்கான வாழ்த்துக்கள் மற்றும் அன்னார் பற்றிய சிறப்புக் கட்டுரைகளடங்கிய பொன்விழா சிறப்பு மலர் ஒன்றும் விழாவில் வெளியிடப்படுவதுடன், பொன்விழா நாயகன் பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் மூன்று நூல்களும் வெளியிடப்படவுள்ளன.

ஏ.எல்.எம்.சலீம்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House