பல்வகைச் செய்தித்துணுக்குகள்

இந்திய பிரதமருக்கான கடிதத்தில் 7 தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய பிரதமருக்கான கடிதத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இன்று காலை கைச்சாத்திட்டதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களை வலியுறுத்தி எழுதியுள்ள கடிதத்தில் கையொப்பமிடும் நடவடிக்கை தற்போது முற்றுப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய பிரதமருக்கான கடிதம் இன்று அனுப்பப்படவிருந்த நிலையில், இந்திய தூதுவர் புது டெல்லி சென்றுள்ளதால், அவர் நாடு திரும்பியவுடன் ஆவணத்தை கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி குறித்த கடிதத்தை இந்தியத் தூதுவரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த ஆவணம் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் தொடர்ந்தும் இணைந்திருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன ஆவணத்தில் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்ப்பால் புரைக்கேறியதால் குழந்தை பரிதாகமாக இறந்தது

தாய்ப்பால் புரைக்கேறியதில் பிறந்து 52 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்தது.

வட்டுக்கோட்டை - சித்தன்கேணியைச் சேர்ந்த கஜா சயான் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்னைய தினம் இரவு தாய்ப்பால் குடித்துவிட்டு குழந்தை உறங்கியது. ஆனால், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் குழந்தையைப் பார்த்த போது, மூக்கு வழியாக குருதி வடிந்து காணப்பட்டது.

இதையடுத்து, பெற்றோர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துமனைக்குக் குழந்தையைக் கொண்டு சென்றனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் அது ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இறப்பு விசாரணையை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் முன்னெடுத்தார்.

கோவிட் மரணங்கள் அப்டேற் (11.01.2022)

இலங்கையில் நேற்றைய செவ்வாய்க்கிழமை தினம் கொரோனா தொற்றால் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,149 ஆக அதிகரித்துள்ளது.

பல்வகைச் செய்தித்துணுக்குகள்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House