
posted 6th January 2022
இந்தியப் பிரதமரிடம் கையளிக்கும் ஆவணத்தில் கையொப்பமிட்ட தமிழ் கட்சிகள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காகத் தமிழ்பேசும் தரப்புக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணம் ஒன்றில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகள் இன்று வியாழக்கிழமை (06) ஒப்பமிட்டன.
கடந்த 21ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட ஆவணத்தில் சம்பந்தன் உட்பட பல தலைவர்களும் இன்று ஒப்பமிட்டனர். அது விரைவில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஊடாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைக்கப்பட்டவுள்ளது.
அந்த ஆவணத்தில் இரா.சம்பந்தன் (தலைவர் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), சி.வி. விக்னேஸ்வரன் (தலைவர் - தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி), சுரேஷ் பிரேமச்சந்திரன் (தலைவர் - ஈ.பி.ஆர்.எல்.எப்.), என். ஸ்ரீகாந்தா (தலைவர் - தமிழ்த் தேசியக் கட்சி), செல்வம் அடைக்கலநாதன் (தலைவர் - ரெலோ), த. சித்தார்த்தன் (தலைவர் - புளொட்) ஆகியோர் இன்று ஒப்பமிட்டனர். மாவை சேனாதிராஜா (தலைவர் - இலங்கைத் தமிழரசுக் கட்சி) எந்த நேரத்திலும் அந்த ஆவணத்தில் ஒப்பமிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்தார். அவரது தரப்பினதும், முஸ்லிம்கள் தரப்பினதும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவர்களின் பங்களிப்பு இல்லாமலேயே பொது ஆவணத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பும் முடிவை இந்தச் சந்திப்பின்போது மனோ கணேசனுடன் நேரிலும், ரவூப் ஹக்கீமுடன் தொலைபேசியிலும் பேசி சம்பந்தன் எடுத்தார்.
கடந்த 21ஆம் திகதி கொழும்பிலுள்ள குளோபல் டவர் ஹோட்டலில் நடைபெற்ற தமிழர் தரப்புக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட கடிதமே இப்போது தமிழ்க் கட்சிகளின் தலைவர்களால் ஒப்பமிடப்பட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்பப்படுகின்றது.
சம்பந்தன் தலைமையிலான தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இந்தியத் தூதுவரைச் சந்தித்து இந்தக் கடிதத்தை அவர் மூலம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பிவைப்பர் எனத் தெரிகின்றது.
1 கிலோ அரிசி 300 ரூபாவை எட்டலாம்
இலங்கையில் புத்தாண்டு காலத்தில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 300 ரூபாய் வரை உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக ஒன்றிணைந்த அரிசி உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்தார்.
சேதன பசளை திட்டத்தின் காரணமாக விவசாயிகள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்கள். பிரதான நெல் செய்கை பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் விவசாய நடடிவக்கையில் இருந்து விலகியுள்ளார்கள்.
இம்முறை பெரும்போக விவசாயத்தில் அதிக விளைச்சலை பெற முடியாது. விவசாயிகள் தங்களின் சுய தேவைக்காக மாத்திரமே விளைச்சலை மேற்கொண்டுள்ளார்கள்.
டொலர் நெருக்கடி காரணமாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்கு தற்போது வரிசையில் நிற்கிறார்கள்.
இந் நிலையில் எதிர்வரும் மாதம் முதல் பொது மக்கள் அரிசியை பெற்றுக் கொள்வதற்காகவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
கோவிட் -19 வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து நாடு பாரிய அழிவை நோக்கி செல்லும். இயற்கை காரணிகளால் அந்த அழிவு ஏற்படாது. அரசாங்கத்தின் தவறான விவசாய கொள்கை திட்டத்தால் முழு நாடும் பெரும்அழிவை நோக்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வயோதிப நோயாளியின் நகைகள் திருடப்பட்டது
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்ற வயோதிபப் பெண்மணியின் 3 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த வயோதிபப் பெண் இன்று வியாழக்கிழமை (06) சிகிச்சையின் நிமித்தம் "எக்ஸ்ரே" எடுப்பதற்காக சென்றபோது , தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் காப்பு ஆகியவற்றைக் கழற்றி தனது கைப்பையினுள் வைத்துச் சென்றுள்ளார்.
திரும்பி வந்து கைப்பையை பார்த்தபோது, அதனுள் இருந்த நகைகள் களவாடப்பட்டிருந்தமையை கண்ணுற்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் முறையிட்டார்.
நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோர் நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் பல தடவைகள் எச்சரித்து வந்தது.
தினமும் வைத்தியசாலைக்கு பெருமளவானோர் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதால் சிகிச்சைக்கு வருவோர் தமது உடைமைகளை தாமே பாதுகாத்துக்கொள்ளவேண்டிய தேவையுள்ளது. அதனால் பெறுமதியான உடைமைகளுடன் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House