
posted 16th January 2022
தைப்பொங்கல் கைகலப்பு காயங்களுடன் அனுமதி
வவுனியாவில் தைப்பொங்கல் தினத்தில் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவங்களில் 03 பெண்கள் உட்பட 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணி தொடக்கம் இரவு 12.00 மணி வரையான காலப்பகுதியிலேயே குறித்த சம்பவங்களில் பதிவாகியுள்ளன.
இவ்வாறு காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 ஆண்களும் 03 பெண்களும் அடங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் வவுனியா பூந்தோட்டம், புளியங்குளம், ஈச்சங்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொரொணா மரணங்கள் அப்டேற் (16.01.2022)
இலங்கையில் மேலும் 07 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினம் ( 14) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,197 ஆக பதிவாகியுள்ளது.
பின்னைய தொகுப்பு
கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 14 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணங்கள் நேற்று நிகழ்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 15, 211 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறந்து கரையொதுங்கிய மீன்கள் - காரணம்தான் என்ன?
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியைமேற்கொள்ளும் மீனவர்களே காரணமாக இருக்கக்கூடும் என மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வடக்கு கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்களது இழுவைப்படகுகளில் பிடிக்கப்பட்ட மீன்களே இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக நெடுந்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் குரூஸ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
கடந்த புதன் கிழமை வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் இழுவைமடி பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது ரோந்து சென்ற இலங்கை கடற்படையினரை கண்டு தப்பியோடியதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு இலங்கைக் கடற்படையை கண்டு ஓடியபோது மடியை வெட்டிவிட்டுச் சென்ற காரணத்தினால்தான் இவ்வளவு பெருந் தொகையான மீனகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன என்றார்.
அதிகரித்துள்ள காட்டுயானைகளின் அட்டகாசம்
கிளிநொச்சி - இராமநாதபுரம் - அழகாபுரி பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அந்தப் பகுதிக்குள் நுழைந்த யானைக் கூட்டம் அறுவடைக்குத் தயாராகவிருந்த 1800 மரவள்ளி கன்றுகளை அழித்துள்ளன. நள்ளிரவு தாண்டி ஒரு மணியளவில் நுழைந்த யானைகள் அதிகாலை 4 மணி வரை அங்கேயே நின்றன. அவை, தமது வாழ்வாதார பயிர்களான மரவள்ளி, வாழை, தென்னைமரம் என்பவற்றை முற்றாக அளித்துள்ளன என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பக கிராமசேவையாளர் மற்றும் கிளிநொச்சி பிரதேச செயலர் மற்றும் வனஜீவராசிகள் தினைக்களம் என பலருக்கும் தெரிவித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் பகுதி மக்கள் கோரினர்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House