
posted 14th January 2022
காணாமற்போன தனியார் பஸ் உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டார்
தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் மூன்று நாள்களாகக் காணாமற்போன நிலையில் சங்கானை மண்டிகைக்குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாதகலைச் சேர்ந்த கடம்பன் (வயது-38) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உள்ளூர் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளரான அவர் மூன்று நாள்களாக காணாமற்போயிருந்தார் என்று இளவாலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவரது சடலம் இன்று பிற்பகல் சங்கானை மண்டிகைக்குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கோவிட் தொற்றும் உயிரிழப்பும் அப்டேற் (14.01.2022)
இலங்கையில் நேற்று வெள்ளிக்கிழமை கொவிட் தொற்றால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,190 ஆக அதிகரித்துள்ளது.

எஸ் தில்லைநாதன்
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மன்னார் விஐயத்தில் இங்குள்ள கள நிலவரங்களை கேட்டறிந்துள்ளனர்.
(வாஸ் கூஞ்ஞ) 14.01.2021
கடந்த புதன்கிழமை (12.01.2021) ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மன்னாருக்கு வருகை தந்து மன்னார் மாவட்டத்தின் இன்றைய கள நிலவரங்களை மதத் தலைவர்கள், அரசு சார்பற்ற நிறுவன மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து கேட்டறிந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சந்திப்பில் அவர்கள் மதங்களின் தலைவர்கள், அரசு சார்பற்ற பிரதிநிதிகள் மற்றும் சிவில் நிர்வாக பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடி மன்னார் மாவட்ட மக்கள் தற்பொழுது எதிர்நோக்கும் பிரச்சனைகள், சவால்கள் என்பவற்றையும், மன்னார் பாலத்தடியில் இராணுவத்தினரின் சோதனைகள் மூலம் பிரயாணிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளையும் கேட்டறிந்ததாகவும், அத்துடன் சிறையில் வாடும் அரசியல் கைதிகள், காணி அபகரிப்பு சம்பந்தமாகவும் கேட்டறிந்ததாகவும், மனித உரிமை தொடர்பான கருத்துக்களையும் கேட்டு அறிந்ததுடன், அங்கு கலந்து கொண்டவர்கள் மாவட்ட நிலமைகளை விரிவாக எடுத்துரைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தாங்கள் அரசுடன் தொடர்புள்ளவர்களாக இருப்பதால் இவைகள் தொடர்பாக தாங்கள் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பொருளாதார சிக்கல்களை நீக்குவதற்கு தாங்கள் உதவிக் கரத்தை மன்னாரிலும் மேற்கொள்ள இருப்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னார் வைத்திசாலையின் நிலையையும், அதன் தேவைகளையும், இளைஞர் யுவதிகளின் வேலை வாய்ப்புக்கள் தொடர்பாகவும் கருத்துக்கள் சிவில் பிரதி நிதிகளால் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இவ் ஐரோப்பிய குழுவினர் மன்னார் மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களையும் நேரடியாக சந்தித்து உரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House