பலாலி விமான நிலையத்தை புனரமைப்பு

இலங்கைக்கு இந்தியா அளிக்கும் நிதியுதவியின் கீழ் பலாலி விமான நிலையத்தை புனரமைத்து, செயற்படவைக்கவேண்டுமென்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே, நேற்று இந்த தகவலை தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

13ஆவது திருத்தத்தை வலியுறுத்தி பிரதான தமிழ்க் கட்சிகள் அனைத்தும் கையெழுத்திட்ட ஆவணம், இந்தியத் தூதரிடம் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது. இதன்போதே, இந்தியத் தூதர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நடந்தது. இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டது.

வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, பலாலி விமான நிலையத்தை மீண்டும் செயற்படுத்த வேண்டுமென தமிழர் தரப்பினர் வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த இந்திய தூதர், ‘இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்திய அவசர நிதியுதவியளிக்கிறது. இந்த நிதியின் கீழ் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரித்து, விமான நிலையத்தை மீள இயங்க வைக்க வேண்டுமென இந்தியா தெரிவித்துள்ளது. இந்த விடயத்தில் இலங்கை இன்னும் எமக்கு பதிலளிக்கவில்லை. எனினும், அதனை நிறைவேற்ற நாம் அழுத்தம் கொடுப்போம் என்றார்.

பலாலி விமான நிலையத்தை புனரமைப்பு

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House