
posted 8th January 2023
சீப்பு சின்னத்தில் போட்டியில் குதித்த ஐ.தே.சு.மு.ஐ.தே.சு.மு.
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் வாழைப்பழச் சீப்பு சின்னத்தில் தனித்துப் போட்டியிட தீர்மானித்துள்ளது.
நேற்று சனிக்கிழமை (07) ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் செயலாளரும் சட்டத்தரணியுமான மைத்திரி குணரத்ன யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து கட்சி நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிலரே யாழ்ப்பாணத்தில் இதுவரை காலமும் செயற்பட்டனர் ஆனால் மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்துள்ளனர். இலங்கை முழுவதும் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்றார்.
ஜெலி மீனின் தாக்குதலால் உயிரிழந்த ஜெனி ராஜ்
யாழ்ப்பாணத்தில் ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்கனான கடற்தொழிலாளர் ஒருவர் 4 மாதங்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த அல்ஜின் ஜெனி ராஜ் (வயது 52) எனும் மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த செப்ரெம்பர் மாதம் 09ஆம் திகதி பண்ணை பகுதியில் இறால் பிடிப்பில் ஈடுபட்டு இருந்தபோது ஜெலி மீனின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அதனை அடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையில் 20 நாட்கள் தொடர் சிகிச்சை பெற்ற பின்னர், வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதிலும் அவர் பூரணமாக குணமடையவில்லை.
வீட்டில் ஓய்வில் இருந்தபோதிலும் திடீர் சுகவீனங்கள் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (06) ஜெலி மீனின் தாக்குதலின் தாக்கத்தினால் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)