பதிவற்று சிறையில் வாடிய கைதிகள் ஐவர் விடுதலை

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படாமல் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த அரசியல் கைதிகள் ஐவர் நேற்று புதன்கிழமை வீடு திரும்பியிருக்கின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது.

2019 ஆம் ஆண்டு பளை வைத்தியசாலை வைத்தியர் சிவரூபனுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு எதிராக வழக்குகள் எவையும் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.

குறித்த நபர்கள் குறித்து உறவினர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட்ட பல்வேறு தரப்புக்களிடமும் முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று அவர்கள் ஐவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒப்படைக்கப்பட்டவர்களை பொறுப்பேற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் அவர்களின் வீடுகளில் ஒப்படைத்திருப்பதாக தெரியவருகிறது.

இதேவேளை, விரைவில் வைத்தியர் சிவரூபனும் விடுதலையாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதிவற்று சிறையில் வாடிய கைதிகள் ஐவர் விடுதலை

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House