படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16ஆவது ஞாபகார்த்த தின  நிகழ்வு

கடந்த 2006ஆம் ஆண்டு திருமலையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16ஆவது ஞாபகார்த்த தின நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அதன்படி, மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் அமைந்துள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஞாபகார்த்த நினைவுத் தூபியில் இன்றுதிங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதன்போது படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு ஊடக அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடைபெறும், இந்த ஞாபகார்த்த நிகழ்விற்கு ஊடகவியலாளர்கள், சமூக நலன் விரும்பிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளையும் பங்குகொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16ஆவது ஞாபகார்த்த தின  நிகழ்வு

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House