
posted 28th January 2022

பல்துறைக்கலைஞர், கவிஞர் மருதூர் என்.எம். அலிக்கான் வெளியிட்டுள்ள “நெஞ்சில் பூத்த நெருப்பு” எனும் கவிதை நூலின் சிறப்புப் பிரதியொன்று கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீபுக்கு நேரில் கையளிக்கப்பட்டது.
அண்மையில் வெளியிடப்பட்ட இந்த கவிதை நூலின் சிறப்புப் பிரதியை நூலாசிரியர் என்.எம். அலிக்கான கல்முனை மாநகர சபையின் மேயர் அலுவலகத்தில் வைத்து மேயர் றகீபிடம் கையளித்து அவரது வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.
இதன்போது மேயர் றகீப், பல்துறைக்கலைஞர் நூலாசிரியர் அலிக்கானின் கவிப்புலமை உட்பட பல்வேறு ஆற்றல்கள், திறமைகளையிட்டு பாராட்டுக்களைத் தெரிவித்துடன் மேலும் பல இலக்கியப் படைப்புக்களை வெளிக்கொண்டுவர வேண்டுமெனவும் வாழ்த்துரைத்தார்.
மேலும் இந்த நிகழ்வின் போது மாநகர சபையின் பொது நூலகம் உட்பட ஏனைய பிரதேச நூலகங்களுக்கான “நெஞ்சில் பூத்த நெருப்பு” நூல் பிரதிகளும் கையளிக்கப்பட்டன.
பல்துறைக்கலைஞர் மருதூர் என்.எம்.அலிக்கான கடந்த வருடம் கலாச்சார திணைக்களத்தினால் “சுவதம்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டாரென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House