
posted 17th January 2022
இலங்கை அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் புது வருட (2022) நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வு நிந்தவூரில் நடைபெற்றது.
சங்கத்தலைவரும் பிரதம தபாலதிபருமான யூ.எல்.எம்.பைஸர் தலைமையில், நிந்தவூர் பிரதம தபாலக மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.
கடந்த 14 வருடங்களாகச் சிறப்புற இயங்கிவரும் மேற்படி அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் வருடாவருடம் இத்தகைய புதுவருட நாட்காட்டிகளை வெளியிட்டுவருவது வழக்கமாகும்.
நடைபெற்ற நாட்காட்டி வெளியீட்டு நிகழ்வின் போது, நாட்காட்டியின் முதலாவது பிரதியை சங்கத்தின் புதிய செயலாளர் எம்.ஜே.எம்.சல்மானுக்கு சங்கத்தலைவரும், பிரதம தபாலதிபருமான யூ.எல்.எம்.பைஸர், சங்க பொருளாளர் ரி.குணநாதன் சகிதம் வழங்கி வைத்தார்.
கடந்த 14 வருட வரலாற்றுத் தடம் பதித்து நீதி நேர்மையுடன் செயற்பட்டு வரும் தமது சங்கம் அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்களின் பல்வேறு பிரச்சினைகள், கோரிக்கைகளுக்காகப் போராடி வெற்றிகளைக் கண்டுவந்துள்ளதாகவும், ஏனைய சகோதர தொழிற்சங்கங்களுடனும் ஆதரவளித்து முன்னோக்கிச் செல்வதாகவும், எதிர்காலத்தில் மேலும் துடிப்புடன் சங்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமெனவும் நிகழ்வுக்குத் தலைமை வகித்து உரையாற்றிய சங்கத்தலைவர் பைஸர் சூளுரைத்தார்.
நிகழ்வில் சங்க உறுப்பினர்கள், முக்கியஸ்தர்களுக்கு நாட்காட்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.


ஏ.எல்.எம்.சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House