நம்பியவளுக்கு நடந்த கொடுமை

வடமராட்சி - நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பாதிக்கப்பட்ட யுவதி தனக்கு நேர்ந்த இந்தக் கொடுமை குறித்து நேற்று புதன்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,

அவரின் கைபேசிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்காத நிலையில் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த இளைஞன் , யுவதியை திருமணம் செய்வதற்கு தயாராக இருக்கிறார் என்றும், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடன் வருமாறும் கூறியுள்ளார். வரும்போது, வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணம் என்பவற்றை எடுத்து வருமாறும் கூறியிருக்கிறார்.

இளைஞனின் ஆசை வார்த்தையை நம்பிய குறித்த யுவதி, தனது சங்கிலி உள்ளிட்ட சொற்ப நகைகளையும் , 40 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு நேற்றுமுன்தினம் காலை இளைஞன் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு நின்றிருந்த குறித்த இளைஞன் அப்பெண்ணை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு , ஐஸ்கிறீம் கடை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் சிற்றுண்டி சாப்பிட்டு , ஐஸ்கிறீம் குடித்த பின்னர் காலை 10 மணியளவில் இளைஞன், அந்த யுவதியை தனது தாயாருக்கு அறிமுகம் செய்வதாகக் கூறி வடமராட்சி திக்கம் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு ஆள் நடமாற்றமற்ற பகுதி ஒன்றுக்கு யுவதியை அழைத்து சென்று ஆசை வார்த்தைகளை கூறி , உறவு கொண்டுள்ளார். பின்னர் , தண்ணீர் வாங்கி வருவதாக கூறி அவ்விடத்தில் யுவதியை தனியே விட்டு விட்டு சென்றுள்ளார். இளைஞன் சென்று சில நிமிடங்களில் மூன்று இளைஞர்கள் அவ்விடத்திற்கு சென்று யுவதியை பலாத்காரமாக வன்புணர்ந்தனர்.

பின்னர் யுவதியை அழைத்து சென்ற இளைஞனும் அந்த இடத்திற்கு வந்தவர்களுமாக நால்வர் யுவதியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதன் பின்னர், யுவதியிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் , நகைகள், கைபேசி என்பவற்றை பறித்த பின்னர், யுவதியை காதலித்தவராகக் கூறப்படும் இளைஞர் யுவதியை மீண்டும் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று யுவதியின் கிராமத்துக்கு அருகில் இறக்கி விட்டு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் யுவதி முறைப்பாடு செய்தநிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதி பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதி என்பதனால் முறைப்பாட்டை நெல்லியடி பொலிஸார் பருத்தித்துறை பொலிஸாரிடம் பாரப்படுத்தினர்.

பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் துன்னாலையை சேர்ந்த நான்கு இளைஞர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

எனினும், அவர்களை விசாரணைகளை உட்படுத்த முன்பதாக அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து, அவர்கள் மீதான சந்தேகம் வலுத்த நிலையில் பொலிஸார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நம்பியவளுக்கு நடந்த கொடுமை

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House