
posted 5th January 2022

திரு பரத்
'சிஸ்கா' என்னும் தொழில் நுட்பத்தை, அதாவது அரசாங்க நிர்வாக நடவடிக்கைகளை கனணி முறைப்படுத்தல் என்ற தொழில் நுட்பத்தை மன்னார் மாவட்ட செயலகத்தில் பணியாற்றுகின்ற ஒருவரான பரத் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது மாவட்டத்துக்கு பெருமையாகும் மன்னார் அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் இவ்வாறு புகழாரம் சூட்டினார்.
இந்த வருடம் தொடக்கம் மாவட்ட செயலகத்தின் செயல்பாடுகள் யாவும் மக்கள் நலன்கருதி தொழில் நுட்பம் மூலம் முன்னெடுக்க வேண்டியுள்ளது என்பதால், இது தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் மன்னார் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் முன்லையில் உரையாற்றும்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
இந்த புதிய வருடத்தில் நாம் பல சவால்களை சந்திக்க இருக்கின்றோம்.
இந்த வருடம் எமது செயல்பாடுகள் பெரும்பாலானவை தொழில் நுட்பத்துக்குள் செல்ல இருக்கின்றது. இதை எம்மால் எடுக்கப்பட்ட சத்திய பிரமானத்தில் தெரிவித்துள்ளோம்.
இன்றைய காலக்கட்டத்தில் நாம் தொழில் நுட்பத்துக்குள் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
சகல விடயங்களையும் மக்கள் இலகுவாக அறிந்து கொள்ளக் கூடிய தொழில் நுட்பத்தினூடாக, ஒன்லைன் ஊடாக, செயல்படுத்தும் திட்டத்துக்குள் நாம் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
மன்னார் மாவட்டம் கடந்த வருடம் பெரிய சாதனை ஒன்றை நிலைநாட்டியிருந்தது.
அதாவது 'சிஸ்கா' என்னும் தொழில் நுட்பத்தை, அதாவது அரசாங்க நிர்வாக நடவடிக்கைகளை கனணி முறைப்படுத்தல், என்ற தொழில் நுட்பத்தை, எமது மாவட்ட செயலகத்தில் பணியாற்றுகின்ற ஒருவரான பரத் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு, இது எமது அமைச்சின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு, தற்பொழுது இலங்கை நாட்டில் சகல நிறுவனங்களிலும் இந்த தொழில் நுட்ப முறை அறிமுகப்படுத்துவதற்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இது எமது மன்னார் மாவட்டத்துக்கு பெருமையை ஈட்டித்தரப்பட்டுள்ளது. இத் திட்டத்தை முன்னெடுத்த எமது செயலகத்தில் கடமைபுரிகின்ற திரு பரத் என்பவருக்கு எமது மாவட்ட ரீதியில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து நிற்கின்றேன் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House