தேடிச் சென்று சேவையாற்றும் லயன்ஸ்

“தேவைகள் உள்ள இடங்களை, கல்விக் கூடங்களை தேடிச் சென்று சேவையாற்றும் பெரும் பணியை லயன்ஸ் கழகங்கள் ஆற்றிவருகின்றன.
அந்த வகையில் கல்முனை நகர லயன்ஸ் கழகம் தனது கல்வி அபிவிருத்தி சேவைத்திட்டங்களை மிகவும் சிறப்பான முறையில் முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியதாகும்.”

இவ்வாறு மணற்சேனை சுவாமி விபுலானந்தா வித்தியாலய அதிபர் என். வரதராஜன் கூறினார்.

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் கல்வி மேம்பாட்டு செயற்திட்டத்தின் கீழ் வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் சேவைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மேற்படி பாடசாலையில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றுகையிலேயே அதிபர் வரதராஜன் மேற்கண்டவாறு கூறினார்.

நிகழ்வில் கல்முனை நகர லயன்ஸ் கழகம் சார்பில் ஆளுனரின் சுற்றுச்சூழல் திட்ட இணைப்பாளர் லயன். கே. பென்னம்பலம், பொருளாளர் லயன்.ரி. சத்தியகீர்த்தி, செயலாளர். லயன்.கே.ஐ. இராமகிருஷ்னன், ஆளுநனரின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் எம். பரமேஸ்வரநாதன் லயன்.கே. தட்சனாமூர்த்தி, லயன்.கே. அருள் ஞானமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிபர் என்.வரதராஜன் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“தாய், தந்தையினரை இழந்த, வறுமையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட எமது இப்பாடசாலைக்கு கல்முனை நகர லயன்ஸ் கழகம் பல தடவைகள் கல்வி மேம்பாட்டு உதவிகளை நல்கி வந்துள்ளன.

தேவை உள்ள இடங்களை தேடிச் சென்று இத்தகைய உதவிகளை நல்கி பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டை ஏற்படுத்தும் நல்ல பணியை கல்முனை நகர லயன்ஸ் கழகம் முன்னெடுத்து வருகின்றது.

இத்தகைய உதவிகள் பெயர் புகழுக்காக அன்றி உண்மையான சேவை மனப்பாங்குடன் இக்கழகத்தினால் வழங்கப்படுவதற்கு நன்றி பகர நாம் கடமைப்பட்டுள்ளோம்.

கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் பிரதி உபகாரமோ பெயரும் புகழும் பெரும் நோக்கோ இல்லாத தன்னலம் கருதா சேவையாளர்களே அங்கத்துவம் வகித்து வருவது அக்கழகத்தின் சேவைகள் சிறப்புறுவதற்கு முக்கிய காரணமாகும் என்றார்.

தேடிச் சென்று சேவையாற்றும் லயன்ஸ்

ஏ.எல்.எம்.சலீம்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House