தேசிய மட்ட சம்பியனான நிந்தவூர் அல் மதீனா விளையாட்டுக் கழக கபடி அணியினருக்கு நிந்தவூரில் மாபெரும் வரவேற்பு
தேசிய மட்ட சம்பியனான நிந்தவூர் அல் மதீனா விளையாட்டுக் கழக கபடி அணியினருக்கு நிந்தவூரில் மாபெரும் வரவேற்பு

இலங்கை தேசிய கபடி சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையிலான தேசிய மட்ட கபடி சுற்றுப்போட்டியில் தேசிய மட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட நிந்தவூர் அல் மதீனா விளையாட்டுக் கழக கபடி அணியினருக்கு இன்று மாலை சொந்த ஊரான நிந்தவூரில் பெரு வரவேற்பளிக்கப்பட்டது.

தேசிய மட்டத்திலான குறித்த கபடி இறுதிப் போட்டியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றதன் மூலம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு அம்பாறை மாவட்டத்திற்கும் நிந்தவூர் பிரதேசத்திற்கும் பெருமை தேடித்தந்து வரலாற்றுச் சாதனை படைத்த இக் குழுவினரை வரவேற்கும் நிகழ்வை நிந்தவூர் கல்வி சுற்றாடல் மற்றும் விளையாட்டு அபிவிருத்தி மையம் விமரிசையாக ஏற்பாடு செய்திருந்தது.

அதன் போது நிந்தவூர் பிரதான வீதியில் வைத்து மேற்படி சாதனைபடைத்த வீரர்கள் குழு வரவேற்கப்பட்டதுடன். அவர்களுக்கு பூமாலைகள் அணிவித்து கௌரவமும் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் பாண்ட் வாத்திய இசை முழங்க வாகன பவனியாக அழைத்துவரப்பட்டனர்.

நிந்தவூர் பிரதேசத்தின் முக்கிய உள்ளுர் வீதிகளெங்கும் இளைஞர்கள் பொது மக்கள் திரள வாகன பவனியாக அழைத்து வரப்பட்டபோது வழி நெடுகிலும் பொது மக்கள் வெடி கொழுத்தி ஆரவரித்து வீரர்களை வரவேற்றனர்.

அத்துடன் பல இடங்களில் பெண்கள் குரவை இசைத்து பாரம்பரிய முறைப்படி வீரர்களை வரவேற்கும் வகையில் செயற்பட்டதுடன் உள்ளுர் வீதிகளெங்கும் இந்த வாகன ஊர்வலம் வருகை தந்தபோது இளைஞர்கள் மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பவனியாகவும் வீரர்களை அழைத்துவந்தனர்.

தமக்கு நிந்தவூர் பிரதேச மக்கள் இவ்வாறான ஒரு பெரு வரவேற்பை அளித்தமைக்கு குறித்த விளையாட்டுக் கழக முக்கியஸ்தர்கள் பெருமகிழ்வு தெரிவித்ததுடன் குறிப்பாக நிந்தவூர் கல்வி சுற்றாடல் மற்றும் விளையாட்டு அபிவிருத்தி மைய முக்கியஸ்தர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்திற்கும் நிந்தவூரிற்கும் பெருமை சேர்த்த நிந்தவூர் அல் மதீனா விளையாட்டுக்கழக கபடி அணியினருக்கும் கழகத்திற்கும் உற்சாகம் ஊட்டும் நோக்குடனும் எதிர்காலத்தில் அவர்கள் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்டுவதற்கு ஊக்கமளிக்கும் வகையிலும் இந்த வரவேற்பை ஏற்பாடு செய்ததாக மேற்படி அபிவிருத்தி மையத்தின் முக்கியஸ்தர் எம்.ஐ.உமரலி (சிரேஷ்ட தாதிய உத்தியோத்தியோகத்தர்) தெரிவித்தார்.

தேசிய மட்ட சம்பியனான நிந்தவூர் அல் மதீனா விளையாட்டுக் கழக கபடி அணியினருக்கு நிந்தவூரில் மாபெரும் வரவேற்பு

ஏ.எல்.எம்.சலீம்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House