திருட்டும், இறப்பும்

அலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து திருடியவர் கைது

வாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு வந்து அலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்து திருடியவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அத்துடன், சந்தேக நபர் திருடிய அலைபேசிகளை விற்பனை செய்து கொடுத்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் சத்திரச்சந்தியில் உள்ள அலைபேசி விற்பனை நிலையத்தில் கடந்த டிசெம்பர் 22ஆம் திகதி இரவு திருட்டு இடம்பெற்றது.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் விற்பனை நிலையத்தில் பெறப்பட்ட சி. சி. ரி. வி. பதிவுகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் றில்ரோக் தலைமையிலான குழுவினர் வாழைச்சேனைக்கு சென்று சந்தேகநபரைக் கைது செய்தனர்.

சந்தேகநபர் திருடிய அலைபேசிகளை விற்பனை செய்து கொடுத்தனர் என்று குற்றச்சாட்டிலும் இருவர் கைது செய்யப்பட்டனர். அத்துடன், அவர்களிடமிருந்து 6 அலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.

சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டார்

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டார்.

கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை ரமணன் (வயது-47) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

அவரின் குடும்பத்தினர் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு சென்றிருந்த நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

திருட்டும், இறப்பும்

எஸ் தில்லைநாதன்

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்

For Holiday Bookings, click the preferred section

Home Page
Home Page

Apartments
Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House