
posted 25th January 2022
அளவெட்டி ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயில் அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சம்பிரதாய பூர்வமாக நடைபெற்றது.
அடிக்கல்லை செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகனும் அமெரிக்கத் துறவியும் கோப்பாய் ஸ்ரீ சுப்பிரமுனிய கோட்ட முதல்வருமாகிய ரிஷி தொண்டுநாதன் சுவாமிகளும் இணைந்து நாட்டி வைத்தனர்.
ஶ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரமம் இலங்கையில் அளவெட்டி எனும் கிராமத்தில் குருதேவர் சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளால் 1949ஆம் ஆண்டு யோகசுவாமிகளின் ஆசியுடன் ஆரம்பிக்கப்பட்டது.
சிறுவர்களுக்கான சமய, பண்ணிசை, நடன வகுப்புகள் பெரியவர்களுக்கான ஆன்மீக வகுப்புகள், யோகாசனம், சற்சங்கம் எனச் சிறப்பாக இயங்கி வந்த ஆச்சிரமம் 1980ஆம் ஆண்டுகளின் இறுதியில் யுத்தத்தால் முற்றாக சேதம் அடைந்து செயலிழந்தது. இருப்பினும் ஆச்சிரமத்தில் 1972ஆம் ஆண்டு குருதேவர் தாபித்த ஸ்ரீ பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் தொடர்ச்சியாக பூசைகள் நடை பெற்று வருகின்றன.
ஶ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரம மீள் புனரமைப்பின் முதற் கட்டமாக தியான மண்டபத்துடன் கூடிய சிவன் கோயிலுக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House