
posted 15th January 2022
மன்னார் தலைமன்னார் ஏ14 பிராதான வீதியானது புனரமைப்புக்கு உட்படுத்தப்பட்டபோது சரியான திட்டமின்மையால் இதில் பிரயாணம் மேற்கொள்வோர் பாரிய விபத்துகளுக்கு உள்ளாகக்கூடிய நிலை காணப்படுவதுடன் கல்வெட்டுக்களும் சரியான இடங்களில் அமைக்கப்படாமையால் குடியிருப்புக்களும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதை மன்னார் பிரiஐகள் குழுவின் கவனத்துக்கு கொண்டு வந்ததைத் தொடர்ந்து பிரஜைகள் குழு நேரடி பார்வையில் இறங்கியிருந்தனர்.
மதவாச்சி தலைமன்னார் ஏ தராதரம் கொண்ட ஏ14 வீதியின் ஒரு பகுதியான மன்னார் தலைமன்னார் வீதியானது கடந்த ஓரிரு வருடங்களாக புனரமைப்பு செய்யப்பட்டு இவ் வீதி அகலப்படுத்தப்படும் பணி நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.
இவ் வீதி ஏ தராதரம் கொண்டதாக அமைந்திருந்தாலும் இவ் வீதியின் புனரமைப்பு பி. துராதரத்தைக் கொண்ட செயல்பாடாகவே அமைந்திருப்பதாகவும்
மற்றும் முன்னைய நிலமையைவிட தற்பொழுது வீதியின் புனரமைப்பு பணியால் விபத்துக்கும் சரியான திட்டமிடல் தன்மை இல்லாமல் இவ் வீதி பனரமைக்கப்பட்டு வருவதாக மன்னார் பிரஜைகள் குழுவுக்கு பல முறைப்பாடுகள் வந்தவண்ணம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதைத் தொடர்ந்து மன்னார் பிரஜைகள் குழுவின் ஆளுநர் சபை உறுப்பினர்கள் இது தொடர்பாக இவ் வீதியை நேரடியாகச் சென்று பார்வையிட்டு இது தொடர்பான அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்வதற்கான தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இது தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் ஆழுநர் சபை உறுப்பினரும் முன்னாள் மன்னார் நகர சபை உப தவிசாளருமான ஜேம்ஸ் யேசுதாசன் கருத்து தெரிவிக்கையில்;
தற்பொழுது புனரமைக்கப்பட்டுள்ள இவ் வீதியானது வழமையான வீதியைவிட மிகவும் உயர்த்தப்பட்ட நிலையில் இம் மன்னார் தலைமன்னார் வீதி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இவ் வீதியின் இரு மருங்கிலும் தடுப்பணைகள் போடப்படாத காரணத்தினால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக எமக்கு தெரியப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதையிட்டு நாங்கள் குறிப்பிட்ட இடங்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டபோது, மக்கள் தெரிவிக்கும் விடயம் உண்மையானது என எமக்கு தென்படுகின்றது.
அத்துடன் முக்கிய இடங்களில் தெரு விளக்குகளும் காணப்படவில்லை. இரவில் வரும் வாகனங்கள் பொது மக்கள் குறிப்பிடப்படும் இடங்களில் தடுப்பு இல்லாத காரணத்தினால் விபத்துகளுக்கு உள்ளாகும் நிலை காணப்படுகின்றது.
இது தொடர்பாக யாரிடம் முறையீடு செய்வது என்பது எமக்கு தெளிவில்லாத தன்மையே காணப்படுகின்றது. எங்களுடைய பார்வையில் வீதி விபத்துகளுக்கு ஏற்றவாறு இப் புனரைமப்பு செய்யப்பட்டுள்ளது எமக்கு மிகவும் வேதனையை அளிக்கின்றது.
இது தொடர்பாக நாங்கள் சில உயர் அதிகாரிகளை நேரில் சென்று இதை சுட்டி காட்டியபோதும் அவர்கள் இதற்கு பொறுப்புகூற முடியாத நிலையில் இருக்கின்றனர்.
இவ்வாறு இருக்க வெகு விரைவில் மன்னார் தலைமன்னார் இவ் வீதியானது ஒப்பந்தக்காரர்களினால் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சட்டபூர்வமாக கையளிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக எமக்கு தெரியவருகின்றது.
இவ் வீதி பல இடங்களில் பூரணப்படுத்தப்படாமல் கையளிக்கப்படுமாகில் முக்கிய இடங்களில் குறிப்பாக மன்னார் நகர் பேசாலை ஆகிய பகுதிகளில் மக்கள் மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்கு பல இடர்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது என்பதையும் எங்கள் பிரஜைகள் குழுவினர் நேரடியாக கண்காணித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஒரு சமூக சேவை பொது மகனாகிய ஜெயக்குமார் குரூஸ் தெரிவிக்கையில்;
தற்பொழுது எங்கள் பேசாலை பகுதியில் இவ் வீதியை அமைக்கும்போது மழை காலங்களில் நீர் வெளியேறுவதற்கான சரியான கல்வெட்டு இவ் வீதியில் அமைக்கப்படவில்லை.
இதன்காரணமாக அன்மையில் பெய்த கன மழை காரணமாக எமது கிராமம் பாரிய அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது.
அத்துடன் இங்கு இந்த வீதியில் ஒரு கல் வெட்டு அமைத்துள்ளனர். அது இன்னும் நீண்ட நாட்களாக முற்றுப்பெறாது இடைநிறுத்தி வைத்துள்ளனர்.
இரவில் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை மின் இணைப்பு இல்லாமையால் எதிர்காலத்தில் இங்கு விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது என அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House