
posted 20th January 2022
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ (இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை) அவர்களின் தலையீட்டின் கீழ் இவ்வீட்டிற்கான புதிய வீடொன்றும், 'அன்பளிப்பு பத்திரம்' மும் டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பில் 2020 ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக்கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புதன்கிழமை (19.01.2022) புதிய வீடொன்றை அன்பளிப்பாக அலரி மாளிகையில் வைத்து வழங்கினார்.
இவ்வீடு, நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சின் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குரிய, கொழும்பு 02 கொம்பனித்தெருவில் அமைந்துள்ள மெட்ரோ ஹோம்ஸ் வீடமைப்பு திட்டத்தின் 40 ஏ 4/10 இலக்க வீடே தினேஷ் பிரியந்த ஹேரத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இலங்கையில் பரா வீர வீராங்கனைகளின் திறமைசாலிகள் நமது நாட்டில் கூட உள்ளதால் இத் துறையையும் இணைப்பது பற்றி பிரமருக்கு ஒரு கருத்தும் முன்வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன், விளையாட்டு மேம்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரிய, பராலிம்பிக் குழுவின் தலைவர் லெப்டினன் கேர்னல் தீபால் ஹேரத், பராலிம்பிக் குழுவின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் அம்பேமொஹொட்டி, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் (காணி) அனுர பிரசன்ன, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் (வீடு) ரத்ன குமார மற்றும் தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வாஸ் கூஞ்ஞ
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House