ஜனாதிபதிக்கு எடுத்துரைத்து எமக்குரிய தீர்வைப் பெற்றுத் தாருங்கள் - யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள்

“நீங்கள் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுகின்றீர்கள். ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கிறீர்கள். எனவே எமது பிரச்னைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்து எமக்குரிய தீர்வைப் பெற்றுத் தாருங்கள்” இவ்வாறு சனிக்கிழமை (29.01.2022) நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் வேண்டுகோள் விடுத்தனர் யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள்.

நீதி அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவையை ஆரம்பித்து வைக்க வருகை தந்த நீதி அமைச்சர் அலி சப்ரி சனிிக்கிழமை மாலை யாழ்ப்பாண நகர் ஜிம்மா பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்டு யாழ். முஸ்லீம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்போது அமைச்சரிடம் தமது பிரச்னைகளை எடுத்துக் கூறிய மக்கள்,
தாங்கள் 1990 ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக வடக்கிலிருந்து அனுப்பப்பட்டு மீண்டும் மீள்குடியேறி இங்கே வந்திருக்கின்றோம். ஆனால் எம்மில் பலர் தற்போதும் புத்தளம் பகுதியில் வசித்து வருகின்றார்கள்.

வடக்கில் முஸ்லிம் மக்களுக்கு காணிப் பிரச்சனை இருக்கிறது. அதிலும்1990 ஆம் ஆண்டு நாங்கள் இங்கே வெளியேற்றப்படும்போது, இருந்த குடும்பங்கள் இப்போது பல மடங்காகியுள்ளதால், பலர் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற விரும்புகின்றபோதிலும் தற்போது காணிப்பிரச்னை இப்பவும் பிரச்சனையாகவே இருக்கின்றது.

2014ஆம் ஆண்டு மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் வடக்கில் முஸ்லிம்களுக்கு தொடர் மாடிக் கட்டடங்கள் அமைத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அது இதுவரைக்கும் நிறைவேற்றப்படவில்லை.

தற்போது நீங்கள் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுகின்றீர்கள். ஜனாதிபதியின் ஆலோசகராக இருக்கிறீர்கள். எனவே எமது பிரச்சனைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்து நமக்குரிய தீர்வைப் பெற்றுத் தாருங்கள் .

யாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பில் பேசுவதற்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர்கூட இல்லை. நாங்கள் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொள்ளவும் முடியாது. எனவே நம் சார்பில் எமது பிரச்னைகளை ஜனாதிபதியிடம் எடுத்துரைத்து எமக்கு உள்ள காணிப் பிரச்சனைக்கு தீர்வை பெற்று தாருங்கள் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் அலி சப்ரி; இந்த காணிப் பிரச்சனை என்பது முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல வடக்கில் வாழும் அனைத்து மக்களுக்கும் இது ஒரு தொடர்ந்த பிரச்சனையாகவே இருக்கிறது. இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு எடுத்துரைத்து எமக்குரிய தீர்வைப் பெற்றுத் தாருங்கள் - யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House