
posted 27th January 2022

திருமதி ராதா ஞானரெத்தினம்
மட்டக்களப்பு குருக்கள்மடத்தைச் சேர்ந்த திருமதி ராதா ஞானரெத்தினம் " அகில இலங்கை சைவப் புலவர் சங்கம்" நடாத்திய 2020ஆம் ஆண்டிற்குரிய சைவப் புலவர் பரீட்சையில் இரண்டாம் பிரிவில் சித்தியடைந்துள்ளார்.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளராகவும், மட்டக்களப்பு ஆசிரியர் வள நிலைய வளவாளராகவும், அத்துடன் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் பட்ட மேற் கல்வி டிப்ளோமா பாடநெறியின் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகின்றார்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கலைமாணி பட்டதாரியான (தமிழ் சிறப்பு) இவர் தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டமேற் கல்வி டிப்ளோமாவையும், இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் கல்வியில் முதுகலைமாணி பட்டத்தையும் (MATE) பூர்த்தி செய்துள்ளார்.
"மட்டக்களப்பு நூற்றாண்டு நட்சத்திரங்கள்" எனும் லயன் கழகத்தின் ஸ்தாபக உறுப்பினரான இவர் சிறந்த சமய சொற்பொழிவாளரும், சமூக சேவையாளருமாவார்.
இலக்கியவியலாளரான இவர் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட கவிதை, கட்டுரை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் பல பரிசுகளையும். பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
குருக்கள்மடம் கிராமத்தின் முதலாவது பெண் சைவப் புலவர் என்ற பெருமையை தனதாக்கிக் கொண்ட இவர், கல்முனைப் பிராந்தியத்திலுள்ள புகழ் பூத்த கல்லூரியான கல்முனை கார்மேல் பற்றிமா தேசியப் பாடசாலையில் பல வருட காலம் ஆசிரியராகப் பணியாற்றி அதிகளவான மாணவர்களை பல்கலைக் கழகங்களுக்கும், தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கும் அனுப்ப காத்திரமான கல்விப் பணியாற்றி நல்லாசிரியை என்ற பெருமைக்குரியவர்.
தொட்ட பணிகளை துலங்க வைக்கும் சிறந்த கல்வியியலாளரான இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கணபதிப்பிள்ளை ஞானரெத்தினத்தின் துணைவியாரான இவர் குழந்தைவேல் குருக்ககள் மாணிக்கவாசகர், ஞானம்மா தம்பதியினரின் மகளும். இளஞ்சைவப் புலவர் கணபதிப்பிள்ளை சந்திரசோதியின் மருமகளும், அனுசேஷனின் தாயும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House