
posted 13th January 2022
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்குத் திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்டத்தின் மூலம் பசுமை விவசாயத்தை ஏற்படுத்தி நாட்டு மக்களிடையே நல்லிணக்கம், ஒற்றுமையை ஊக்குவிக்கும் கொள்கைத் திட்டத்தின் கீழ் 551 ஆவது படைப் பிரிவின் அனுசரனையுடன் இலங்கையில் முதன் முதலாக வடமராட்சிக் கல்வி வலயத்தில் மாதிரி வீட்டுத் தோட்டம் நேற்று வியாழக் கிழமை (13) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
பருத்தித்துறை ஒராங்கட்டைச் சந்திக்கு அண்மையில் உள்ள வலயக் கல்வி வளாகத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியபாலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக யாழ்.மாவட்டச் செயலர் கே.மகேசன், 55 ஆவது படைப்பிவின் தளபதி பிரிகேடியர் பிரசன்ன குணரத்ன ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக பருத்தித்துறை செயலர் ஆ.சிறி, கரவெட்டி பிரதேச செயலர் இ.தயாபரன், மருதங்கேணி பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தி மற்றும் வலயக் கல்வி பணிமனை அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அறிமுக நிகழ்வைத் தொடர்ந்து வளாகத்தில் அமைக்கப்பட்ட 24 நாற்று மேடைகளில் மரக்கறி வகைகளுக்கான விதைகள், நாற்றுக்கள் பிரதம அதிதிகள் சிறப்பு அதிதிகள், மாணவர்களால் நடுகை செய்யப்பட்டன. தொடர்ந்து பிரிகேடியர் பிரசன்ன குணவர்ன மாவட்டச் செயலர் கே.மகேசன் ஆகியோர் இந் நாற்று மேடைகளில் பயன்படுத்த சேதனைப் பசளை பொதிகளை வழங்கினார்கள்.
தைப்பொங்கல் தினத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இம் மாதிரி வீட்டுத் தோட்டத்தில் எதிர் வரும் சித்திரைப் புத்தாண்டுடன் அறுவடை இடம் பெறும் எனத் தெரிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House