
posted 19th January 2022

ஓய்வுபெற்ற நிந்தவூர் கோட்டக் கல்விப் பணிப்பாளரும் முன்னாள் குவாசி நீதிபதியுமான கலாபூஷணம் ஏ எல் எம் அமீன் அவர்களின் மறைவு குறித்து நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது
இதுதொடர்பாக அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பு விடுத்துள்ள அனுதாபச் செய்தியில்,
கல்விப் புலத்தில் மட்டுமன்றி சமூகநல பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அர்ப்பணித்தவர் மறைந்த முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அல்-ஹாஜ் ஏ எல் எம் ஆமீன்.
நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் வளர்ச்சிப் படிகளில் ஆரம்பகாலம் தொட்டு மிக காத்திரமான பங்களிப்பினை வழங்கியவராவார். இன்று இவ்வமைப்பு பெரு விருட்சமாக வளர்ச்சி பெற்று பல்வேறு சமூக நலப் பணிகளில் அறியாத் தடம்பதிக்க இவர் ஆற்றிய பங்களிப்புக்கள் என்றும் நினைவுகூரத்தக்கது.
நல்லாசிரியராக, அதிபராக, கோட்ட கல்விப் பணிப்பாளராக, கலை இலக்கிய ஆர்வலராக, ஊடகத்துறை ஜாம்பவானாக, சமூக சேவையாளராக பல்வேறு பாத்திரங்களை ஏற்று சிறப்பாக செய்து காட்டிய அமீன் என்னும் பெரும் சரித்திரம் சரிந்தது ஈடுசெய்ய முடியாதது எனக் குறிப்பிட்டுள்ளனர்
தேனாரம் செய்தியாளர்
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House