
posted 31st January 2022
சங்கானை கிழக்கு J/178 பகுதியிலுள்ள கராச்சி பொது மயானம் பிரதேச மக்களதும் பாதுகாப்பு படையினரதும் ஒத்துழைப்புடன் சிரமதானம் செய்யப்பட்டுள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் குறித்த பகுதியின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் திருமதி துவாரகாதேவி ஜெயகாந்தனின் ஏற்பாட்டில் குறித்த சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக பற்றைகள் மற்றும் பிற பிரதேச மக்களால் கொண்டுவரப்பட்டு கொண்டப்படும் கழிவுகளால் பல்வேறு சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட குறித்த மயானத்தை துப்புரவு செய்ய வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் திருமதி துவாரகாதேவியிடம் அப்பகுதி மக்களும் பொது ஆர்வலர்களும் விடுத்திருந்த வேண்டுகோளுக்கு அமையவே பொதுமக்களதும் பாதுகாப்பு தரப்பினரது ஒத்துழைப்புடனும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்து.
இது தொடர்பில் குறித்த பிரதேச சபை உறுப்பினர் கூறுகையில், நீண்டகாலமாக சிரமதான பணிகளை முன்னெடுக்காமையால் குறித்த மயானம் பல்வேறு கழிவுகளால் குறிப்பாக வெளியிலிருந்து பலர் கொண்டுவந்து தமது கழிவுகளை கொட்டுவதால் பல சுகாதார சீரழிவுகளுடன் காணப்பட்டது. இவ்வாறு வேறு பிரதேச மக்களால் கொண்டுவரப்பட்டு கொட்டப்படும் கழிவுகள் தொடர்பில் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டும் அது கருத்திற் கொள்ளப்படாது தொடர்ந்தவண்ணம் இருந்தது.
அத்துடன் பற்றைகள் வளர்ந்திருந்ததால் டெங்கு நுழம்பின் பெருக்கத்திற்கும் ஏதுநிலை காணப்பட்டது.
இந்நிலையில் எமது பிரதேச மக்களதும், பாதுகாப்பு தரப்பினரதும் ஒத்துழைப்புடன் குறித்த மயானத்தை தற்போது சிரமதானம் செய்துள்ளோம்.
அந்தவகையில் இனிவருங்காலத்தில் இவ்வாறு வெளியிலிருந்து வருபவர்கள் இம்மயானத்தில் குப்பபைகளை கொட்டாது எமது பிரதேசத்தினதும் குறித்த மயானத்தினதும் சுகாதாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எஸ் தில்லைநாதன்
உங்களது விடுமுறையை சந்தோஷமாக்க கழிப்பதற்கு, விரும்பிய பகுதியைக் கிளிக் செய்யுங்கள்
For Holiday Bookings, click the preferred section
Home Page
Home Page
Apartments
Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B