கோட்டாபய அரசாங்கம் நினைப்பனவற்றை நடைமுறைப்படுத்துவர்கள்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் நினைக்கும் விடயங்களை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள் என ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமது கட்சியை காப்பாற்றுவதற்காக இவ்வாறு அவர்கள் 13ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போலிப் பிரசாரம் மேற்கொள்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

13ஆவது திருத்தச் சட்டத்தினை நாம் தமிழரின் தீர்வாக ஒருபோதும் ஏற்கவில்லை அதனை ஏற்க போவதும் இல்லை.

வடக்கில் இராணுவ மயமாக்கல், சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து தமிழ் மக்களின் உரிமையை பாதுகாப்பதற்காக ஏற்கனவே இந்தியாவின் தலையீட்டில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட அரசியல் சாசனத்தில் உள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரியே 6 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளோம்.

அந்தக் கடிதத்தின் தொடர்ச்சியாக நாம் டில்லி சென்று இந்திய பிரதமரை சந்தித்து அடுத்த கட்டமாக முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் மத்தியில் போலிப் பிரசாரத்தை மேற்கொள்வதுபோல, நாங்கள் 13 ஆவது திருத்தச்சட்டத்தை தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை, ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கோட்டாபய அரசாங்கம் எதைச் செய்ய நினைக்கிறதோ அதனை வடக்கில் நிறைவேற்றுகிறார்கள். அதாவது தற்போது அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு வடக்கின் முகவர்களாக செயற்படுகின்றார்கள் என்றுதான் கூறவேண்டும்.

கட்சியிலிருந்து மணிவண்ணன் பிரிந்து சென்றுவிட்டதால் தமது கட்சியை மணிவண்ணன் கொண்டு சென்று விடுவார் என்பதற்காக கட்சியில் உள்ளோருக்கு ஏதாவது ஒரு வேலையை கொடுக்க வேண்டும்தானே, அதற்காகத்தான் 13ஆவது திருத்தச் சட்டத்தை சவப்பெட்டியில் வைத்து மக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்கிறார்கள். அவர்கள் தமது கட்சியை காப்பாற்றுவதற்காக இவ்வாறு போலி பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள்.

மக்களை ஏமாற்றி கோட்டாபயவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்படுகின்றார்கள் என்றார்.

கோட்டாபய அரசாங்கம் நினைப்பனவற்றை நடைமுறைப்படுத்துவர்கள்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House